கர்ப்பமானதாக கணவரை ஏமாற்றி நாடகம்: மருத்துவ பரிசோதனைக்கு பயந்து திருச்சி பெண் தப்பியோட்டம்!!

Read Time:2 Minute, 27 Second

24cb3a16-854e-4f9e-90f6-030776e71c80_S_secvpfதிருச்சி மேலகல்கண்டார் கோட்டையை சேர்ந்தவர் கஜேந்திரன் (வயது 32). இவரது மனைவி சங்கீதா (24). இந்த தம்பதியினருக்கு கடந்த ஆண்டு திருமணம் நடந்தது.

இந்த நிலையில் சங்கீதா கர்ப்பம் அடைந்ததாக கூறி கடந்த 3 மாதங்களுக்கு முன்பு வளைகாப்பு நடத்தப்பட்டு கீழ கல்கண்டார்கோட்டையில் உள்ள பெற்றோர் வீட்டிற்கு அனுப்பப்பட்டார். பின்னர் சங்கீதா குழந்தை பிறந்தது குறித்து பல்வேறு குழப்பமான தகவல்களை உறவினர்களிடமும், கணவரிடமும் கூறினார்.

இதையடுத்து பிறந்த குழந்தையை மறைத்து விட்டதாகவும், அந்த குழந்தையை கண்டு பிடித்து தரும்படியும் பொன்மலை அனைத்து மகளிர் போலீசில் கஜேந்திரன் புகார் கொடுத்தார். இன்ஸ்பெக்டர் மரகதம் விசாரணை நடத்தி சங்கீதா மற்றும் அவரது தாய் உள்பட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து சங்கீதாவை கைது செய்து சிறையில் அடைத்தார். பின்னர் சங்கீதா ஜாமீனில் வந்து விட்டார்.

இந்த நிலையில் சங்கீதா உண்மையிலேயே கர்ப்பம் ஆனாரா? அல்லது கணவர் வீட்டாரை ஏமாற்றினாரா? என்று கண்டு பிடிக்க போலீசார் அவருக்கு மருத்துவ பரிசோதனை நடத்த முடிவு செய்தனர். அதற்கு அனுமதி கேட்டு திருச்சி ஜே.எம்.5 கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த கோர்ட்டு சங்கீதாவுக்கு மருத்துவ பரிசோதனை நடத்த அனுமதி வழங்கியது.

இதைதொடர்ந்து மருத்துவ பரிசோதனை செய்வதற்காக சங்கீதாவை பொன்மலை போலீசார் தேடினர். அப்போது அவர் தலைமறைவானது தெரிய வந்தது. இதை தொடர்ந்து கடந்த 2 நாளாக போலீசார் சங்கீதாவை உறவினர் வீடு உள்பட பல இடங்களில் தேடி வருகிறார்கள். இதனால் இந்த வழக்கில் மேலும் இழுபறி ஏற்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கோபி அருகே மகனின் அவசர காதல் திருமணத்தால் தந்தை விஷம் குடித்து தற்கொலை!!
Next post இலங்கை தொடர்பான ஐ.நா யுத்தக் குற்ற விசாரணை அறிக்கை புதன்கிழமை வெளியீடு!!!