டெல்லி சவுதி தூதரக அதிகாரி செய்த கொடுமை: நேபாள பெண்களை தினமும் 20 பேர் வரை கற்பழித்தனர்!!

Read Time:3 Minute, 40 Second

bae02175-c94e-4d67-8b0b-afbb56c5934a_S_secvpfநேபாள நாட்டைச் சேர்ந்த 2 பெண்களை டெல்லியில் உள்ள சவுதி அரேபிய நாட்டு தூதரகத்தில் முதல்நிலை செயலாளராக பணியாற்றும் அதிகாரி செக்ஸ் கொடுமைப் படுத்தியதாக புகார் எழுந்தது.

இதைத் தொடர்ந்து அரியானா மாநிலம் குர்கானில் டி.எல்.எப். அபார்ட்மெண்டில் இருக்கும் தூதரக அதிகாரி வீட்டுக்குள் போலீசார் புகுந்து 2 பெண்களையும் மீட்டனர். இவர்கள் இருவரையும் ஒரு கும்பல் தலா ரூ.1 லட்சம் வீதம் பணம் பெற்றுக்கொண்டு தூதரக அதிகாரிக்கு விற்பனை செய்திருப்பது தெரியவந்தது.

மீட்கப்பட்ட 2 நேபாள பெண்களிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில் தூதரக அதிகாரி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் இந்த குற்றச்சாட்டுகளை சவுதி அரேபியா அரசு மறுத்துள்ளது. இது ஆதாரமற்ற குற்றச்சாட்டு. கற்பழிப்பு புகார் நிரூபிக்கப்படவில்லை என்று மறுத்துள்ளது.

அரியானா போலீசார் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் மூலம் தூதரக அதிகாரி மீது நடவடிக்கை எடுப்பதில் தீவிரம் காட்டி வருகிறார்கள்.

2 நேபாள பெண்களுக்கும், டெல்லி ஆஸ்பத்திரியில் மருத்துவ பரிசோதனை நடந்தது. இதில் அவர்கள் பாலியல் கொடுமையால் பாதிக்கப்பட்டு இருப்பது உறுதியானது.

இதற்கிடையே 2 நேபாள பெண்களிடமும் அரியானா போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்று வருகிறார்கள். அப்போது தூதரக அதிகாரியின் வீட்டில் நடந்த செக்ஸ் கொடுமை பற்றி விவரித்துள்ளனர்.

தங்களை தினமும் 20 பேர் வரை கற்பழித்ததாகவும், ஒரே சமயத்தில் 7 அல்லது 8 பேர் வரை சேர்ந்து செக்ஸ் கொடுமைப் படுத்தியதாகவும் திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளனர்.

தூதரக அதிகாரி வீட்டில் கண்காணிப்பு காமிரா பொருத்தப்பட்டு இருந்தது. அதை போலீசார் கைப்பற்றி அதில் பதிவான காட்சிகளை போட்டுப் பார்த்தனர். அதில் 22 பேர் வரை வீட்டுக்கு வந்திருப்பது பதிவாகி இருந்தது.

அதில் அனைவரும் தலை முதல் கால்வரை மூடிய நிலையில் சவுதி நாட்டு பாரம்பரிய உடை அணிந்து இருந்தனர். வீட்டுக்குள் நுழையும் அவர்களை தூதரக அதிகாரி வரவேற்று அழைத்துச் செல்லும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது.

இந்த வீடியோ காட்சிகளில் இடம் பெற்று இருப்பவர்கள் யார்? எதற்காக அங்கு வந்தார்கள்? என தூதரக அதிகாரியிடம் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர். வெளியுறவு அமைச்சகத்திடம் இருந்து அனுமதி கிடைத்ததும் விசாரணை நடைபெறும் என்று போலீஸ் அதிகாரி ஒருவர் கூறினார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஜம்மு-காஷ்மீரில் முதல் சர்வதேச மாரத்தான்: பெண்களிடம் தவறாக நடந்து கொண்ட 12 பேர் கைது!!
Next post தினமும் அளவுக்கு அதிகமாக வை–பை பயன்படுத்தினால் அலர்ஜி நோய் வரும்: ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை!!