ரயிலில் பயணம் செய்த போக்குவரத்து அமைச்சர்!!

Read Time:1 Minute, 38 Second

1393723311Nimalபோக்குவரத்து துறை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா உடரட மெனிக்கே புகையிரதத்தில் கொழும்பில் இருந்து பதுளைக்கு கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.

இந்தப் பயணத்தின் இடையில் ஹட்டன் புகையிரத நிலையத்தில் வைத்து ஊடகவியலாளர்களிடம் கருத்து வௌியிட்டார் போக்குவரத்து அமைச்சர்.

இந்த புகையிரதத்தில் பயணம் மேற்கொள்ளும் பயணிகளுக்கு சிறந்த சேவையை பெற்றுக் கொடுக்கும் நோக்கில் தற்போது காணப்படுகின்ற குறைநிறைகளை அறிந்து கொள்வதற்காக குறித்த புகையிரதத்தில் தான் பயணம் செய்ததாக அமைச்சர் இதன்போது குறிப்பிட்டிருந்தார்.

பின்தங்கிய நிலையில் காணப்படும் புகையிரத சேவையை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தற்போது கிடைத்திருக்கும் போக்குவரத்துத்துறை அமைச்சு தனக்கு சவால் இல்லை என்றும் இதற்கு முன்னர் பதவி வகித்த அமைச்சுக்களை சரிவர நிர்வகித்ததாகவும் அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டியிருந்தார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post துப்பாக்கிச் சூட்டில் பெண் பலி – கொட்டாஞ்சேனையில் சம்பவம்!!
Next post தங்க கட்டிகளை கடத்தியவர் கைது!!