மாணவர்களுக்கு வழங்கப்படுகின்ற தலைமைத்துவப் பயிற்சி நிறுத்தப்படும்!!

Read Time:1 Minute, 26 Second

1853411213Lakshmanகடந்த அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டு வந்த பலகலைக்கழக மாணவர்களுக்கான தலைமைத்துவ பயிற்சி நிறுத்தப்படும் என்று பல்கலைக்கழக மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்‌ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

குறித்த காலப்பகுதியில் அந்த மாணவர்களுக்கு சர்வதேச மொழிப் பயிற்சி வழங்குவதற்கு ஆலோசித்து வருவதாக அமைச்சர் தெரிவித்தார்.

இன்று காலை மகாநாயக்க மற்றும் அஸ்கிரிய பீட தேரர்களை சந்தித்து ஆசி பெற்றுக் கொண்ட அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பல்கலைக்கழக மாணவர்கள் தமது கல்வி நடவடிக்கைகளை சுதந்திரமாக மேற்கொள்வதற்கான வழிவகைகளை ஏற்படுத்துவதே புதிய அரசின் நோக்கம் என்றும் அமைச்சர் இதன்போது தெரிவித்தார்.

அத்துடன் மாணவர்களின் பிரச்சினைகள் சம்பந்தமாக கலந்துரையாடி தீர்வுகளைப் பெற்றுக் கொடுப்பதற்கு முயற்சிப்பதாகவும் அமைச்சர் லக்‌ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கொழும்பில் இரு தரப்பினரிடையே மோதல் – 07பேர் வைத்தியசாலையில்!!
Next post துப்பாக்கிச் சூட்டில் பெண் பலி – கொட்டாஞ்சேனையில் சம்பவம்!!