யாழில் 72 பவுன் நகை திருட்டு!!

Read Time:1 Minute, 54 Second

731356711Robbery22நகைளை திருட்டுக் கொடுத்த 7 பேர் யாழ். பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடுகளை பதிவு செய்துள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ். நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த உற்சவம் நடைபெற்று வரும் நிலையில், நேற்று கந்தனின் தேர்த்திருவிழா நடைபெற்றது.

இத் தேர்த்திருவிழாவிற்கு நாட்டின் பல பகுதியில் இருந்தும் அடியார்கள் ஆலயத்திற்கு வருகை தந்திருந்தனர்.

அவ்வாறு வருகை தந்த அடியார்கள் மத்தியில் உளாவித் திரிந்த திருடர்கள், அடியார்கள் தேர் இழுத்துக்கொண்டு சென்ற சமயம் 3 பெண்களின் நகைகள் திருடப்பட்டன.

அதன்படி, பொலிஸார் திருட்டினை புரிந்த கொழும்பு வத்தளை மற்றும் கிளிநொச்சி பகுதியைச் சேர்ந்த 3 பெண்களை கைதுசெய்து விசாரணை மேற்கொண்டனர்.

அதன்பின்னர் மாலை நல்லைக் கந்தன் பச்சை சாத்தி வீதியுலா வந்த நேரம், திருடர்கள் தமது கைவரிசையினை காட்டியுள்ளனர்.

அதன்போது, 72 பவுண் நகைகள் திருடப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளனர்.

நல்லூர்க் கந்தன் ஆலய வளாகத்தில் 600 ற்கும் மேற்பட்ட பொலிஸார் மற்றும் பொலிஸ் புலனாய்வாளர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கழிவகற்றும் இடத்திலிருந்து சடலம் கண்டெடுப்பு!!
Next post உயர்தரப் பரீட்சையின் வினாத்தாள்கள் திருத்தும் பணிகள் இன்று ஆரம்பம்!!