அரசியலமைப்பு பேரவைக்கான சிவில் பிரதிநிதிகள் நியமனம்!!

Read Time:2 Minute, 12 Second

6715597253666513cc (1)அரசியலமைப்பு பேரவைக்கான சிவில் பிரதிநிதிகளாக கலாநிதி ஏ.டீ. ஆரியரத்ன, கலாநிதி ராதிகா குமாரசுவாமி மற்றும் உயர் நீதிமன்ற நீதியரசர் ஷிப்லி அஸீஸ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஏற்கனவே பாட்டளி சம்பிக்க ரணவக்க, விஜயதாஸ் ராஜபக்ஷ மற்றும் விஜித ஹேரத் ஆகியோர் அரசியலமைப்பு பேரவைக்கு நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

8வது பாராளுமன்றின் முதலாவது அரசியலமைப்பு பேரவை கூட்டம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று சபாநாயகர் அலுவலகத்தில் இடம்பெற்றது.

இதில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, சபாநாயகர் கரு ஜயசூரிய, எதிர்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், அமைச்சர்களான விஜயதாஸ ராஜபக்ஷ, பாட்டளி சம்பிக்க ரணவக்க, டபிள்யு.டி.ஜே.செனவிரத்ன ஆகியோர் கலந்து கொண்டனர்.

அரசியலமைப்பு சபைக்கு எஞ்சியுள்ள உறுப்பினர்கள் விரைவில் நியமிக்கப்பட்டு சுயாதீன ஆணைக்குழுக்கள் நிறுவப்பட வேண்டும் என ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

இது தொடர்பில் அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்கள் மற்றும் சிவில் அமைப்புக்களிடம் இருந்து வேட்பு மனுக்களை கோரவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அரசியலமைப்பு பேரவையின் அடுத்த கூட்டம் செப்டெம்பர் 21 மற்றும் 23ம் திகதிகளில் இடம்பெறவுள்ளது.

அரசியலமைப்பு பேரவைக்கு பெயரிடப்பட்டுள்ள சிவில் பிரதிநிதிகளின் பெயர்கள் அங்கீகாரத்திற்கென செப்டெம்பர் 22ம் திகதி பாராளுமன்றில் சமர்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சர்வதேச விசாரணை கோரி வடக்கு கிழக்கில் தொடர் போராட்டங்கள்!!
Next post கம்பஹாவில் 2 சடலங்களும் 4 வயது குழந்தை ஒன்றும் மீட்பு!!