இலங்கைக்கு போர் கப்பல் வழங்க முடிவாகவில்லை: மத்திய அரசு!!

Read Time:2 Minute, 5 Second

1913299335maduraiஇலங்கைக்கு போர் கப்பல் வழங்குவது குறித்து முடிவாகவில்லை என உயர் நீதிமன்ற கிளையில் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயர் நீதிமன்ற மதுரை கிளையில், மதுரை மாவட்டம் மேலூர் எட்டிமங்கலத்தைச் சேர்ந்த சட்டத்தரணி ஸ்டாலின் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:

இந்திய அரசு இலங்கைக்கு 2 போர் கப்பல்களை விற்பனை செய்ய முடிவு செய்திருந்தது. இதை அப்போதைய மத்திய அமைச்சர் நாராயணசாமியும் உறுதி செய்திருந்தார். இந்தக் கப்பலை வாங்கிய பின் இலங்கை கடற்படையினர் இந்திய மீனவர்களுக்கு எதிராகவே பயன்படுத்துவர். ஏற்கனவே, இலங்கை அரசுக்கு எதிராக தமிழகத்தில் எதிர்ப்பு அலை உள்ளது. தமிழக சட்டசபையிலும் இலங்கைக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

எனவே, இலங்கைக்கு போர் கப்பல்கள் விற்கத் தடை விதிக்க வேண்டும், என கூறியிருந்தார். இந்த மனுவை நீதிபதிகள் ஆர்.சுதாகர், வி.எம்.வேலுமணி ஆகியோர் விசாரித்தனர்.

அப்போது மத்திய அரசு சார்பில் ஆஜரான சட்டத்தரணி பி.தர்மராஜ், மனுதாரர் குறிப்பிடும்படி போர் கப்பல் வழங்குவது குறித்து இந்திய அரசிடம் எந்த முடிவும் இல்லை.

வணிக ரீதியாகப் பயன்படுத்தும் கப்பல் குறித்து பேச்சுவார்த்தை மட்டுமே நடந்துள்ளது. அதில், ஆயுதங்கள் எதுவும் கிடையாது’ என்றார். இதைப் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள் மனுவை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அரசியலமைப்பு சபை முதல் முறையாக இன்று கூடுகிறது!!
Next post பதில் பிரதம நீதியரசராக சந்ரா ஏக்கநாயக்க நியமனம்!!