வட மாகாண சபை பிரேரணை ஐ.நா அலுவலகத்தில் கையளிப்பு!!

Read Time:2 Minute, 16 Second

863784501cvkசர்வதேச விசாரணை கோரி வட மாகாண சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் ஐ,நா அலுவலகத்தில் கையளிக்கப்பட்டுள்ளதாக வட மாகாண அவைத் தலைவர் சிவிகே.சிவஞானம் தெரிவித்தார்.

தமிழர்கள் மீதாக இன அழிப்பு தொடர்பில் ஐ.நா சபை விசாரணை வலியுறுத்தி வட மாகாணசபையில் நிறைவேற்றப்பட்ட பிரேரணையை உறுப்பினர்கள், அமைச்சர்கள் உறுதிப்படுத்திய பின் முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரனின் கையப்பத்துடன் ஐ.நா.சபை அலுவலகத்தில் கையளிக்கப்பட்டுள்ளதாக சிவஞானம் குறிப்பிட்டார்.

இன்று (02) யாழ் மாட்டின் வீதியில் அமைந்துள்ள இலங்கை தமிழரசு கட்சியின் அலுவகத்தில் இடம்பெற்ற முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரர் அமிர்தலிங்கத்தின் 30வது ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வில் உரையாற்றிய அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்து அவர் உரையாற்றுகையில், ´தமிழர்களின் உண்மை, நேர்மை, காட்டிக்கொடுக்கா தன்மை போன்ற செயற்பாடுகளில் இருந்து அமரர் அமிர்தலிங்கம் முன்னின்று செயற்பட்டவர். இதனுடாக மக்களின் தேவைகள் வேதனைகளை அவர் நன்கு அறிந்தவர்.

எமது மண்ணில் ஈழத்தின் வடிவத்தினை செயற்பாட்டினை வழிகாட்டியவர் அமிர்தலிங்கம். அதேபோன்று தமிழரசு கட்சியின் முன்னாள் தலைவர்கள் சிறந்த மன்னர்கள். அவர்கள் எப்போதும் ஒரு விடிவினை தேடி செயற்பட்டவர்கள். ஆகையினால் எதிர்காலத்திலும் தற்போதை தமிழரசு கட்சியின் தலைவர்கள், உறுப்பினர்கள் தமிழ் மக்களுக்கான நிரந்தமான விடிவினை தேடித்தருவார்கள்´ என வட மாகாண அவைத் தலைவர் தெரிவித்தார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி பூரண புனரமைப்புக்கு உட்படுத்தப்படும்!!
Next post ஆசீட் வீச்சு – பெண் உள்ளிட்ட இருவர் பாதிப்பு!!