திருமண வைபவத்திற்கு சென்ற பஸ் விபத்து!!

Read Time:1 Minute, 0 Second

1223164166Untitled-1பதுளை – ஷாலிஎல – வெலிமட வீதியில் அபவன பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் 10 பேர் காயமடைந்துள்ளனர்.

தனியார் பஸ் ஒன்று இயந்திரக் கோளாறு காரணமாக வீதியைவிட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.

சம்பவத்தில் காயமடைந்தவர்கள் சிகிச்சைகளுக்காக பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை திருமண நிகழ்வொன்றுக்காக சென்று கொண்டிருந்த பஸ்சே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.

மேலும் இதன்போது பஸ்ஸில் 34 பேர் பயணித்துள்ளனர்.

சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பதுளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அஸ்பெஸ்டோஸ் சீட்டுகளுக்கு தடை!!
Next post எதிர்க்கட்சி தலைவர் பதவியைக் கோரும் தமிழரசுக் கட்சி!!