தமிழ்ச்செல்வனை ஒழித்துக்கட்டும் நோக்கத்தில் பொட்டுஅம்மான் குழுவினரே தகவல் வழங்கினராம்!!

Read Time:4 Minute, 9 Second

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அரசியல் பிரிவுத் தலைவர் அரச விமானப் படையினர் மேற்கொண்ட விமானத்தாக்குதலில் கொல்லப்பட்டது சம்பந்தமாக பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வவுனியா மற்றும் வன்னிப் பிரதேசங்களிலிருந்து வெளியாகிக்கொண்டிருக்கின்றன. இவ்வாறு புலிகளின் அரசியற் பிரிவு தலைவர் எஸ்.பி.தமிழ்ச்செல்வனும் மற்றும் முன்னணி ஆயுதப்பிரிவுத் தலைவர்களும் தங்கியிருந்த நிலையத்தின் மீது குறிதவறாமல் விமானப்படையினர் தாக்குதலை நடத்தியதற்குத் தேவைப்பட்ட உளவுத் தகவல்கள் புலிகளின் தரப்பிலிருந்தே கிடைத்தன எனவும் புலிகள் இயக்கத்தில் ஏற்பட்டுள்ள தீவிர அதிகாரப் போட்டியும் உட்பூசல்கள் காரணமாகவே புலிகள் இயக்கத்தின் ஒரு தரப்பினரிடமிருந்து மற்றும் தமிழ்ச் செல்வன் தங்கியிருந்த நிலையம் பற்றிய உளவுத்தகவல்கள் விமானப் படையினருக்கு வழங்கப்பட்டன எனவும் இவ்வாறு புலிகள் இயக்கத்தின் தலைமைத்துவத்தின் முன்னணித் தலைவர்களிடையே பெரும் அதிகாரப்போட்டி நிலவுவதாகவும் வன்னியிலிருந்து கடந்த வெள்ளிக்கிழமை பிற்பகல் திடுக்கிடும் தகவல்கள் மக்களிடையே வெளியாகியுள்ளன. புலிகள் இயக்கத்தில் பிரபாகரனுக்கு அடுத்துள்ள முன்னணித் தலைவர்களிடையே கடும் அதிகாரப்போட்டி எழுந்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கும் மேற்படி தகவல்களுக்கேற்ப, கடந்த காலங்களில் புலிகள் இயக்கத்தின் அரசியற் பிரிவுத் தலைவர் தமிழ்ச் செல்வனுக்கும் உளவுப் பிரிவுத் தலைவர் பொட்டு அம்மானுக்கும் இடையே பாரதூரமான கருத்து வேறுபாடும், வெறுப்பும் நிலவிவந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பகையுணர்வு காரணமாகவே தமிழ்ச்செல்வனையும் அவருக்கு ஆதரவான முன்னணி ஆயுதப் பிரிவுத் தலைவர்களையும் ஒழித்துக்கட்டும் நோக்கத்தில் இடப்பட்ட திட்டத்தின்படியே தமிழ்ச்செல்வனின் நடமாட்டம், தங்குமிடம், போக்குவரத்து பற்றிய நிச்சயமான உளவுத் தகவல்கள் அரச பாதுகாப்புப் படையின் உளவுப்பிரிவுகளுக்கு வன்னியிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளன என்பதை வன்னித் தகவல் வட்டாரங்கள் தற்போது உறுதிசெய்துள்ளன. இந்த வகையில் தமிழ்ச்செல்வன் தங்கியிருந்ததும் விமானத்தாக்குதலுக்குள்ளானதுமான நிலையத்தின் அமைவிடம் பற்றியும் அவர் அந்த நிலையத்துக்கு எப்போது வந்தார் எவ்வளவு நேரம் தங்கியிருப்பார் என்பது பற்றியும் துல்லியமான தகவல்கள் பாதுகாப்புப் படையின் குறித்த புலனாய்வு பிரிவுகளுக்கு முன்னரே வன்னியிலிருந்து கிடைத்தன எனவும் இதைத் தொடர்ந்து விமானப்படையினர் செலுத்துநர் இல்லாத விமானங்கள் மூலம் கண்காணிப்பை மேற்கொண்டு அதன் பின்னர் அந்த நிலையத்தின் மீது தாக்குதலை நடத்தியதாகவும் மேற்படி வன்னித்தரப்பு தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post திருவாரூர் அருகே 51 ஆண்டுகளாக தீபாவளி கொண்டாடாத அபூர்வ கிராமங்கள்
Next post கண்ணுக்கும் மூளைக்கும் விருந்தாக… -அரியதோர் புகைப்படங்களும், அதுகுறித்த செய்திகளும்…