எதிர்கட்சி தலைவர் உள்ளிட்ட முக்கிய பதவிகளுக்கு நபர்களை நியமிக்கும் அதிகாரம் ஜனாதிபதி வசம்!!

Read Time:1 Minute, 59 Second

13392424241674286307SLFP-Lபுதிய பாராளுமன்றில் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு உரித்தான சில பதவிகளுக்கு உரிய நபர்களை நியமிக்கும் அதிகாரம் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவர் என்ற அடிப்படையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு வழங்கப்பட்டுள்ளது.

இன்று (28) கூடிய ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தின் போது இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, புதிய பாராளுமன்றின் எதிர்கட்சித் தலைவர், பிரதி சபாநாயகர் மற்றும் எதிர்கட்சி பிரதம கொரடா ஆகியோரை நியமிக்கும் அதிகாரம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு வழங்கப்பட்டுள்ளது.

95 பாராளுமன்ற உறுப்பினர்களின் 80 பேர் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியை பிரதிநிதித்துவப்படுத்துவதால் ஏகமனதாக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட வேண்டும் என முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

எடுக்கப்படும் தீர்மானத்திற்கு யாரேனும் எதிர் பிரசாரம் செய்தால் அவர்களது கட்சி உறுப்புரிமை பறிக்கப்பட்டு ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

சமரச தேசிய அரசாங்கத்தில் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு அமைச்சுப் பதவி பெற்றுக் கொள்வது தொடர்பான இறுதி முடிவு எடுக்கும் அதிகாரமும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கே வழங்கப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 2015 இன் முதல் 100 கவர்ச்சிக் கன்னிகள் (PHOTOS)!
Next post பெண்களின் பின்புறம் ஊசியால் குத்தும் மர்ம மனிதன்!!