மஹிந்த, அர்ஜூனவுக்கு எதிரான மனு வாபஸ்!!

Read Time:1 Minute, 31 Second

2145682449Untitled-1முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, மத்திய வங்கியின் ஆளுனர் அர்ஜூன மஹேந்திரன் மற்றும் மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் அஜித் நிவாட் கப்ராலுக்கு எதிராக கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனு, மீளப் பெறப்பட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் மேல் மாகாண சபை உறுப்பினர் ரோணுக பெரேராவால் தாக்கல் செய்யப்பட்ட இந்த மனு இன்று மீளப்பெறப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.

இன்று நீதிமன்றத்தில் இலஞ்ச மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு சார்பில் ஆஜரான சட்டத்தரணி, குறித்த வழக்கானது தமது ஆணைக்குழுவினால் விசாரணை செய்யப்பட்டு வருவதாக சுட்டிக்காட்டினார்.

இது குறித்த விசாரணைகள் முடிவடையும் வரை தமது மனுவை மீளப் பெறுவதாக மனுதாரரால் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

விடயங்களை ஆராய்ந்த கொழும்பு பிரதம நீதவான் கிஹான் பலபிடிய மனுவை மீளப் பெற அனுமதியளித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மீனவர்கள் பிரச்சினையில் தலையிடுமாறு சுஷ்மாவிடம் கோரிக்கை!!
Next post வெலே சுதா உள்ளிட்ட மூவருக்கு எதிரான வழக்கு விசாரணை டிசம்பரில்!!