கிட்டி பார்ட்டி: ராதே மாவை செம கலாய்.. கலாய்க்கும் நெட்டிசன்கள்!!

Read Time:2 Minute, 15 Second

20eaaf7d-2c8f-43b3-9d7d-c4b3bf59ea75_S_secvpfஅடுத்தடுத்து சர்ச்சைகளில் சிக்கி தற்போதைய சர்ச்சை நாயகியாக வலம் வருபவர் ராதே மா. பெயருக்குத்தான் சாமியார் ஆனால் மேக் அப்… லிப்ஸ்டிக்… விலை உயர்ந்த ஆடைகள் என ஒரு நடிகையைப் போல வலம் வரும் இவரது ஆட்சேபகரமான படங்கள் மீடியாக்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இது போதாதென்று, ராதே மா தனது பக்தர்களைக் கட்டிப்பிடிப்பதும், முத்தம் கொடுப்பதுமான படங்களும் வெளியாகின. இவர் குட்டை பாவாடை அணிந்து பாலிவுட் திரைப்பட இசைக்கு ஏற்ப நடனம் ஆடும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

ராதே மாவுக்கு எதிராக பெண் ஒருவர் வரதட்சணை கொடுமை வழக்கு தொடர, இந்த சர்ச்சை முடிவதற்குள் பிக் பாஸ் நிகழ்ச்சி டோலி பிந்த்ரா, ராதே மா தனது சீடர் ஒருவருடன் தன்னை உறவு வைத்து கொள்ள கூறியதாகவும், அவர் மூலம் தனக்கு மிரட்டல் வருவதாகவும் மும்பை போலீசில் புகாரளித்தார். இதுதான் ஒரு சாமியார் சர்ச்சை நாயகியாக மாறிய கதை.

சும்மாவே செம காட்டு காட்டும் நெட்டிசன்கள் இப்படி ஒரு சர்ச்சை நாயகி கிடைத்தால் விட்டு வைப்பார்களா என்ன.? செம கலாய் … செம கலாய் என்று பாராட்டும் அளவுக்கு ராதே மாவை கலாய்த்துததள்ளி விட்டார்கள். இந்த கலாய்த்தல் வைபவத்தின் உச்சகட்டமாக பிடிஐ செய்தி நிறுவனத்க்தின் நிருபர் ஒருவர் ராதே மாவைக் கிண்டல் செய்து கிட்டி பார்ட்டி என்ற புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட. வழக்கம் போல் இது சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஈத்தாமொழி அருகே மயக்க மருந்து கொடுத்து பட்டதாரி பெண் கற்பழிப்பு: வாலிபர் மீது புகார்!!
Next post எனது தோல்வியினை பக்குவமாக ஏற்றுக்கொள்கின்றேன் -பா.அரியநேத்திரன்!!