கபீர் ஹசீமுக்கு தடை உத்தரவு!!

Read Time:1 Minute, 41 Second

1669754041Untitled-1ஊவா மாகாண சபையின் இரண்டு வெற்றிடங்களுக்கு உறுப்பினர்களை நியமிக்க, ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் கபீர் ஹசீமுக்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பிரதீப் விஜேவர்த்தன என்பவர் தாக்கல் செய்த மனுவை ஆராய்ந்த கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இவ்வாறு உத்தரவு பிறப்பித்துள்ளதாக, எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த பொதுத் தேர்தலில் போட்டியிட்ட ஊவா மாகாண முதலமைச்சர் ஹரீன் பிரணாந்து உள்ளிட்ட இருவர் வெற்றியீட்டியுள்ளனர்.

இதனால் அங்கு இரண்டு வெற்றிடங்கள் நிலவுகின்றன. சம்பிரதாயப்படி பட்டியலில் அடுத்ததாக அதிக விருப்பு வாக்கினைப் பெற்றவரே உறுப்பினராக நியமிக்கப்பட வேண்டும் எனவும், கபீர் ஹசீம் அவ்வாறு செய்யாமல் வேறு இருவரை நியமிக்கவுள்ளதாகவும் தனக்கு தெரியவந்துள்ளதாக பிரதீப் விஜேவர்த்தன தமது சட்டத்தரணி ஊடாக நீதிமன்றதில் தெரியப்படுத்தியுள்ளார்.

விடயங்களை ஆராய்ந்த நீதிமன்றம் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 9ம் திகதி வரை கபீர் ஹசீமுக்கு இந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post எக்னலிகொட வழக்கில் ஏழ்வர் கைதுசெய்யப்பட்டமைக்கு வரவேற்பு!!
Next post நான் தகுதியானவன், எதிர்க்கட்சித் தலைவர் பதவியை ஏற்கத் தயார்!!