அமெரிக்க வீரர் ஓடும்போது மரணம்

Read Time:1 Minute, 18 Second

ஒலிம்பிக் மரதன் போட்டியில் கலந்துகொள்வதற்கான தேர்வுப் போட்டியில் கலந்துகொண்ட அமெரிக்க வீரர் ரியான் ஷே (28 வயது) மரணமடைந்துள்ளார்.
தேர்வுப் போட்டியில் 9 கி.மீ. தூரம் ஓடிய இவர் திடீரென சுருண்டு விழுந்து இறந்தார். போட்டித் தூரம் (42.1.கி.மீ.) `ரியான் 14 வயது சிறுவனாக இருந்தபோது, இவரது இதயம் சாதாரண அளவை விட மிகப் பெரிதாக இருந்தது தெரியவந்தது. 16 வயதில் இவர் ஒரு கார் விபத்தில் காயமடைந்தார். அப்போது, செய்யப்பட்ட பரிசோதனையில் இதயம் இன்னும் பெரிதாகியிருந்தது. எனினும், அவர் மரதனில் ஓடுவதற்கு தடையில்லை என்று டாக்டர்கள் கூறியிருந்தனர். துரதிர்ஷ்டவசமாக அவர் இறந்துவிட்டார்’ என்று ரியானின் தந்தை ஜோ கூறியுள்ளார். அமெரிக்காவில் நடக்கும் நீண்டதூர ஓட்டப்போட்டிகளில், ரியான் 4 முறை தேசிய சம்பியன் கிண்ணம் வென்றுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post ரூபாய் நோட்டில் மொபைல் போன் சார்ஜாகும் வித்தை
Next post செளதி: பிக்பாக்கெட் அடித்தவரின் கை துண்டிப்பு