அனுர, சுசிலுக்கு எதிரான தடையுத்தரவை இரத்துச் செய்ய கோரிக்கை!!

Read Time:1 Minute, 33 Second

752803192Untitled-1அனுர பிரியதர்ஷன யாப்பா மற்றும் சுசில் பிரேமஜயந்த ஆகியோருக்கு எதிராக வழங்கப்பட்டுள்ள தடையுத்தரவை நீக்குமாறு கோரி கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தரணி அருண லக்சிறியினால் குறித்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.

கூட்டமைப்பின் மேலதிக செயலாளர் பேராசிரியர் விஸ்வா வர்ணபால மற்றும் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மேலதிக செயலாளர் துமிந்த திஸாநாயக்க ஆகியோரால், நீதிமன்றத்தில் தவறான ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டு குறித்த தடையுத்தரவு பெறப்பட்டுள்ளதாக மனுதாரர் தெரிவித்துள்ளார்.

இதனால் இந்த தடையுத்தரவு சட்ட ரீதியானது அல்ல என கூறியுள்ள மனுதாரர் அதனை இரத்துச் செய்யுமாறு நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

தகவல்களை ஆராய்ந்த கொழும்பு மேல் நீதிமன்றம் குறித்த மனுவை எதிர்வரும் 28ம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ள தீர்மானித்துள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தேசியப் பட்டியல் விவகாரம் – கூட்டமைப்புக்குள் முரண்பாடா?
Next post மூன்று அமைச்சர்கள் சத்தியப்பிரமாணம்!!