முன்னாள் புலி உறுப்பினர்கள் இருவர் தொடர்ந்தும் விளக்கமறியலில்!!

Read Time:1 Minute, 18 Second

565973516Untitled-112007ம் ஆண்டு அனுராதபுரம் விமானப்படை முகாம் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணைகளை செப்டம்பர் மாதம் 4ம் திகதி முதல் தொடர்ந்து முன்னெடுக்க அனுராதபுர விஷேட மேல் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

சம்பவம் குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே, அனுராதபுர விஷேட மேல் நீதிமன்ற நீதிபதி இவ்வாறு உத்தரவிட்டுள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் சம்பவம் தொடர்பில் குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் விடுதலைப் புலி அமைப்பின் உறுப்பினர்கள் இருவரை எதிர்வரும் 4ம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

குறித்த தாக்குதலில் 16 விமானங்கள் சேதமடைந்ததோடு, பாதுகாப்புப் பிரிவின் 14 பேர் பலியாகினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கோட்டாபயவிடம் எது குறித்து விசாரணை செய்யப்பட்டது தெரியுமா?
Next post தேசியப் பட்டியல் விவகாரம் – கூட்டமைப்புக்குள் முரண்பாடா?