மோட்டார் மற்றும் கைக் குண்டுகள் மீட்பு!!

Read Time:1 Minute, 52 Second

1471760397Untitled-1யாழ்ப்பாணம் – தென்மராட்சி – மீசாலை – ஏரம்பு வீதியிலுள்ள காணியிலிருந்து மோட்டார் குண்டு ஒன்று மீட்க்கப்பட்டுள்ளது.

காணியைத் துப்பரவு செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில், இந்தக் குண்டு நேற்று (சனிக்கிழமை) மாலை கண்டெடுக்கப்பட்டதாக சாவகச்சேரிப் பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள கறுவாக்கேணி எனும் இடத்தில் சனிக்கிழமை மாலை கைக்குண்டு ஒன்றினை மீட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிசார் தெரிவித்தனர்.

குறித்த கிராமத்தில் உள்ள ஆலய உற்சவத்தினை முன்னிட்டு பொதுமக்களால் மேற்கொள்ளப்பட்ட சிரமதானப் பணியின் போது, பனை மரம் ஒன்றின் அடிப்பகுதியில் இருந்து குறித்த குண்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது.

தற்போது கைக்குண்டு குறித்த இடத்திலேயே வைக்கப்பட்டுள்ளதுடன், மட்டக்களப்பிலுள்ள குண்டு செயழிலக்கச் செய்யும் இராணுவப் பிரிவினருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

இவர்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை வந்து தமது கடமையினை மேற்கொள்வார்கள் என பொலிசார் குறிப்பிட்டனர்.

தற்போது வாழைச்சேனை பொலிசார் குறித்த இடத்தில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மொஹமட் ஹனீபா தேசியப் பட்டியலில்!!
Next post கல்முனையில் நான்கு இந்தியர்கள் கைது!!