எதிர்க்கட்சித் தலைவர் யார்?

Read Time:2 Minute, 14 Second

1013405748Untitled-1புதிய பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவு பாராளுமன்ற உறுப்பினர்களின் சத்தியப்பிரமாணம் இடம்பெறும் போது முன்னெடுக்கப்படும் என, தெரியவந்துள்ளது.

எதிர்க்கட்சித் தலைவர் தெரிவு தொடர்பில் இதுவரை இணக்கப்பாடு எட்டப்படவில்லை என ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுடன் விரைவில் இது குறித்து கலந்துரையாடவுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு ஆகியன தேசிய அரசாங்கம் குறித்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள நிலையில், எதிர்க்கட்சி தலைவர் யார் என்பது குறித்த சர்சை எழுந்துள்ளது.

எதுஎவ்வாறு இருப்பினும் எதிர்க்கட்சி தலைவர் பதவி தமது கட்சிக்கு கிடைக்கலாம் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

இம்முறை பாராளுமன்றத் தேர்தலில் யாழ்ப்பாணத்தில் ஐந்து ஆசனங்களையும் வன்னியில் நான்கு ஆசனங்களையும் மட்டக்களப்பில் மூன்று ஆசனங்களையும் அம்பாறை மற்றும் திருகோணமலையில் தலா ஒரு ஆசனத்தையும் கைப்பற்றிய தமிழ் தேசியக் கூட்டமைப்பு தேசியப் பட்டியலில் இரண்டு ஆசனங்களைப் பெற்று 16 ஆசனங்களை வசப்படுத்தியுள்ளது.

இதன்படி எதிர்க்கட்சி தலைவர் பதவி தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு கிடைக்க வாய்ப்புள்ளதாக, தெரிவிக்கப்படுகின்றது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post யாழில் இரண்டு சடலங்கள் மீட்பு.!!
Next post இளநீர் அருந்திய தந்தையும் மகளும் பலி!!