அஇமகா இற்கு புதிய செயலாளர் – ஹமீட் கட்சியிலிருந்து நீ்க்கம்!!

Read Time:1 Minute, 56 Second

1770608688Rishadஅகில இலங்கை மக்கள் காங்கிரஸ் செயலாளர் வை.எல்.எஸ். ஹமீட்டை கட்சியிலிருந்து தற்காலிகமாக இடைநிறுத்த தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கரஸின் தலைவர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

அதுவரை கட்சியின் தற்காலிக செயலாளராக ஷாஜகான் செயற்படுவார் என்றும் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

கொழும்பில் இன்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கட்சி தொடர்பாக அவதூறான செய்திகளைப் பரப்பிய ஹமீட்டை செயலாளர் பதவியிலிருந்து நீக்கியுள்ளதுடன், கட்சியிலிருந்தும் தற்காலிகமாக நீக்குவதாக கட்சியின் உயர்குழு இன்று காலை கூடி முடிவெடுத்தது.

இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக கட்சியின் தவிசாளர் அமீர் அலி தலைமையில் மூன்று பேர் அடங்கிய குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாகவும் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

அக்குழுவில் சிரேஷ்ட சட்டத்தரணி சிராஸ் நூர்தீன், சட்டத்தரணி ருஷ்தி ஹபீப் ஆகியோர் உள்ளடங்குவதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸிற்கு கிடக்கப்பெற்ற தேசியப் பட்டியலுக்கு புத்தளத்தைச் சேர்ந்ந்த நவவி நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 306 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்தது இலங்கை!!
Next post ததேகூ இன் தேசியப் பட்டியல் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்படவில்லை!!