306 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்தது இலங்கை!!

Read Time:1 Minute, 31 Second

493226991Sportsஇலங்கை-இந்திய அணிகளுக்கிடையில் கொழும்பு பி சரவணமுத்து மைதானத்தில் இடம்பெற்றுவரும் இரண்டாவது போட்டியின் முதலாவது இன்னிங்சில் இலங்கை அணி 306 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்தது.

முன்னதாக முதலில் துடுப்பெடுத்தாடியாய் இந்திய அணி நேற்று தமது முதல் இனிங்சில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 393 ஓட்டங்களை பெற்றிருந்தது.

இந்திய அணி சார்பில் ராகுல் 108 ஓட்டங்களையும் சர்மா 79 ஓட்டங்களையும், கோலி 78 ஓட்டங்களையும் ஷா 56 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் இலங்கை அணி சார்பில் ஹேரத் 4 விக்கெட்களையும் பிரசாத், மெத்திவ்ஸ், சமீர ஆகியோர் தலா இரண்டு விக்கெட்களையும் வீழ்த்தினர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கையணி சார்பாக அஞ்செலோ மத்தியுஸ் 102 ஓட்டங்களையும் லஹிரு திரிமான்னே 62 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.

பந்துவீச்சில் இந்திய அணி சார்பாக அமித் மிஸ்ரா, 43 ஓட்டங்களுக்கு 4 விக்கட்டுக்களை வீழ்த்தினார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வௌிநாட்டு நாணயத் தாள்களை கடத்த முயன்றவர் கைது!!
Next post அஇமகா இற்கு புதிய செயலாளர் – ஹமீட் கட்சியிலிருந்து நீ்க்கம்!!