வௌிநாட்டு நாணயத் தாள்களை கடத்த முயன்றவர் கைது!!

Read Time:1 Minute, 6 Second

2026931212Kattunayakaசட்டவிரோதமான முறையில் வௌிநாட்டு நாணயத்தாள்களை வௌிநாட்டிற்கு கடத்தி செல்ல முயன்ற ஒருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று காலை யூ.எல்.302 என்ற விமானத்தினூடாக சிங்கப்பூர் நோக்கி செல்ல இருந்த நிலையில் குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரின் பயணப் பொதியில் இருந்து 15,000 அமெரிக்க டொலர் மற்றும் 10,000 சவூதி ரியாழ்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

இவற்றின் பெறுமதி இலங்கை ரூபாய்ப்படி 24 லட்சத்து 8235 ரூபாய் என சுங்கப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபரிடம் இலங்கை சுங்கப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தரம் 5 புலமை பரிசில் பரீட்சை நாளை!!
Next post 306 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்தது இலங்கை!!