தரம் 5 புலமை பரிசில் பரீட்சை நாளை!!

Read Time:1 Minute, 45 Second

1943337736Examதரம் 5 புலமை பரிசில் பரீட்சை நாளைய தினம் நாடு முழுவதும் நடைபெறவுள்ளது.

இந்தமுறை புலமை பரிசில் பரீட்சைக்காக 3 லட்சத்து 40 ஆயிரத்து 926 மாணவர்கள் தோற்றுவதுடன் நாடு முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 2 ஆயிரத்து 907 மத்திய நிலையங்களில் பரீட்சை நடைபெறவுள்ளது.

இந்தநிலையில் பரீட்சைக்கான அனைத்து ஏற்படும் நிறைவடைந்துள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பரீட்சை நிர்வாக கடமைகளுக்காக 26,000 அதிகாரிகள் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

பரீட்சைக்கான முதலாவது வினாத்தாளுக்கு விடையளிப்பதற்காக காலை 9.30 முதல் 10.15 வரையும், இரண்டாவது வினாத்தாளுக்கு விடையளிப்பதற்காக 10.45 முதல் 12.00 மணிவரையும் நேர அவகாசம் வழங்கப்படும் என்று பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இந்த பரீட்சைகள் தொடர்பில் தகவல்களை பெறுவதற்கு அல்லது முறைப்பாடுகளை தெரிவிப்பதற்கு விசேட தொலைபேசி இலக்கங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

இதன்படி 1911 என்ற அவசர இலக்கத்துக்கோ அல்லது 0112 784208, 011 3 18 83 50, 011 3 14 03 14 அல்லது 0112 2784537 என்ற இலக்கங்களுக்கோ தொடர்பு கொள்ளுமாறு பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ​தேசியப்பட்டியலில் பெண்களின் வீதம் குறைவு!!
Next post வௌிநாட்டு நாணயத் தாள்களை கடத்த முயன்றவர் கைது!!