தேசிய அரசாங்கம் அமைக்க ஶ்ரீசுக இணக்கம்!!

Read Time:1 Minute, 31 Second

1260650811unp-slfpஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து தேசிய அரசாங்கம் ஒன்றை அமைக்க ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு இணக்கம் தெரிவித்துள்ளது.

இந்த விடயம் தொடர்பில் ஆராய்ந்து செயற்பட 6 பேர் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

இக்குழுவிற்கு முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தலைமை வகிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐதேகவுடன் இணைந்து சமரச அரசாங்கம் ஒன்றை அமைக்கவென உடன்படிக்கை கைச்சாத்திடப்படும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நந்திமித்ர ஏக்கநாயக்க தெரிவித்தார்.

அந்த புரிந்துணர்வு உடன்படிக்கையில் உள்ளடங்க வேண்டிய விடயங்கள் குறித்து ஆராயவே சந்திரிக்கா தலைமையில் குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளதென அவர் கூறினார்.

எதிர்வரும் காலங்களில் ஜெனீவாவில் இருந்து இலங்கைக்கு விடுக்கப்படும் அழுத்தங்களுக்கு முகங்கொடுக்கவே தேசிய சமரச அரசாங்கம் ஒன்று அமைக்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கரு புதிய சபாநாயகர்?
Next post ஜனநாயகத்தை பலப்படுத்தி இருக்கின்றோம் – சம்பிக்க ரணவக்க!!