முன்னாள் சபாநாயகர் வீட்டில் ஆலோசனைக் கூட்டம்!!

Read Time:1 Minute, 41 Second

1762153791658079540chamal-rajapaksa-ask2தேசிய அரசாங்கமாக தொடர்ந்து செயற்படுகின்றமை தொடர்பில் சுதந்திரக் கட்சியில் பதவிப் பிரமாணம் செய்துகொள்ளவுள்ள உறுப்பினர்களின் கருத்துக்களை ஆராய்ந்து அறிக்கை தயாரிப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்ட குழு கூடி ஆராய்ந்துள்ளது.

முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இது தொடர்பில் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் புதிதாக பாராளுமன்றிற்கு தெரிவாகியவர்கள் மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு இடையில் இன்று காலை சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

தெரிவாகியவர்களுக்கு வாழ்த்து தெரிவித்ததோடு எதிர்வரும் அரசியல் நடவடிக்கை தொடர்பில் தீர்மானம் மேற்கொள்வதற்காக இச் சந்திப்பு இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

அதன்போது தேசிய அரசாங்கமாக செயற்பட பதவியேற்கவுள்ள பாராளுமன்ற உறுப்பினர்களிடம் கருத்து அறிந்து அறிக்கை சமர்பிக்கவென ஜோன் செனவிரட்ன தலைமையில் குழுவொன்றை ஜனாதிபதி அமைத்தமை குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வடகொரியா தென்கொரியா இடையே மோதல் – எல்லையில் பதற்றம்!!
Next post கரு புதிய சபாநாயகர்?