எம்.பி. மகனிடம் கத்தி முனையில் ரூ.1½ லட்சம் கொள்ளை!!

Read Time:1 Minute, 51 Second

5c279fdb-714a-462d-a814-3eccc2fe6aea_S_secvpfஉத்தர பிரதேச மாநிலத்தை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருடைய 40 வயது மகன் மும்பை வந்திருந்தார். சாந்தாகுருஸ் பகுதிக்கு வந்த அவர், தனக்கு விபசார அழகி ஒருவருடைய சேவை தேவை என்று ஏஜெண்டு ஒருவரை அணுகினார். ஏஜெண்டும் விபசார அழகி ஒருவரை ஏற்பாடு செய்தார். அதன்படி அந்த அழகி காரில் வந்தார்.

எம்.பி.யின் மகன் உல்லாச கனவுடன் விபசார அழகியின் காரில் ஏறினார். இந்த நிலையில் திடீரென விபசார அழகி அவருடைய கழுத்தில் கத்தியை வைத்து, ‘உன்னிடம் உள்ள பணத்தை என்னிடம் கொடு. இல்லை என்றால், இந்த இடத்திலேயே உன்னை கொன்று விடுவேன்’ என்று மிரட்டினார்.

இதை சற்றும் எதிர்பாராத அவர், அதிர்ச்சியில் உறைந்தார். வேறு வழியின்றி தன்னிடம் இருந்த ரூ.1½ லட்சத்தை அந்த பெண்ணிடம் கொடுத்தார். பின்னர், அவரை கீழே தள்ளிவிட்டு விபசார அழகி தான் வந்திருந்த காரில் சிட்டாய் பறந்தார். தப்பித்தோம், பிழைத்தோம் என்று எம்.பி.யின் மகன் நேராக வகோலா போலீஸ் நிலையம் சென்று தன்னிடம் கத்தி முனையில் பணத்தை கொள்ளையடித்த விபசார அழகி மற்றும் அவருடைய கார் டிரைவர் ஆகியோர் மீது புகார் செய்தார். இதன்பேரில், போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இப்படியும் சில ஜென்மங்கள்: கட்டிய மனைவியையே சாமியாருக்கு காணிக்கையாக்க துடித்த புதுமாப்பிள்ளை!!
Next post மேற்கு வங்காளத்தில் மார்க்.கம்யூனிஸ்டு, திரிணாமுல் காங்கிரசார் மோதல்: தொழிற்சங்க நிர்வாகி அடித்துக்கொலை!!