ஒருவரை கடத்திச் செல்லும் வழியில் பொலிஸாரிடம் சிக்கிய 9 பேரும் கைது!!

Read Time:1 Minute, 29 Second

1539928448Arrestகிளிநொச்சி பிரதேசத்தில் நபர் ஒருவரை கடத்திய குற்றச்சாட்டில் சந்தேகத்தின் பேரில் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஏ 32 பாதை வழியாக பூநகரியில் இருந்து மன்னார் நோக்கி சென்ற டிபென்டர் ரக வாகனம் ஒன்று சோதனைக்குட்படுத்தப்பட்ட போது சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

கடத்தபட்டவர், சந்தேக நபர்கள் பயணித்த வாகனத்தில் இருந்து மீட்கப்பட்டுள்துடன் சம்பவம் தொடர்பாக அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறாயினும் கடத்தப்பட்ட நபர், கேரளா கஞ்சா தருவதாக கூறி மூன்று லட்சம் ரூபாவை பெற்றுக்கொண்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

எனினும் கஞ்சாவை வழங்காத காரணத்தினால், தாம் அவரை கடத்திச் சென்றதாக சந்தேக நபர்கள் 9 பேரும் பொலிஸாரிடம் கூறியுள்ளனர்.

சம்பவம் தொடர்பாக முழங்காவில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பெற்ற வெற்றியை பாதுகாக்க இனவாதிகளுடன் அவதானமாக இருக்க வேண்டும்!!
Next post மாணவர்கள் போராட்டத்தில் வன்முறை: புனே திரைப்படக்கல்லூரி மீது தாக்குதல் – 5 பேர் கைது!!