சுசில், அனுர வீடுகளில் ஒட்டப்பட்டுள்ள நீதிமன்ற நோட்டீஸ்!!

Read Time:1 Minute, 25 Second

2040574042Untitled-1ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் சுசில் பிரேமஜெயந்த மற்றும் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் அனுர பிரியதர்ஷன யாப்பா ஆகியோரை அப் பதவிகளில் இருந்து நீக்கும் நோட்டீஸ் அவர்களது வீடுகளில் ஒட்டப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்றத்தால் இன்று வழங்கப்பட்ட உத்தரவுக்கு அமையவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வௌியாகியுள்ளன.

முன்னதாக சட்டத்தரணிகள் ஊடாக அனுப்பபட்ட தடையுத்தரவு நோட்டீஸ்களை பொறுப் பேற்காமையே இதற்குக் காரணம் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இடைக்கால தடையுத்தரவு மற்றும் தடையுத்தரவு போன்றவற்றை பெற்றுக் கொண்டு சுசில் பிரேமஜெயந்த மற்றும் அனுரபிரியதர்ஷன யாப்பா ஆகியோரின் வீடுகளுக்கு சென்றபோது அவர்கள் அங்கு இல்லை.

எனவே குறித்த நோட்டீஸ்களை அவர்களது வீட்டு வாயிலில் அதிகாரிகள் ஒட்டிவிட்டு சென்றுள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஶ்ரீ.சு.க மத்திய செயற்குழு உறுப்பினர்கள் 25 பேர் பதவி நீக்கம்!!
Next post வாக்களிப்பு நிறைவு – விபரங்கள் இதோ!!!