அனந்தபுரி எக்ஸ்பிரசில் ஜன்னல் கதவின் ஷட்டர் விழுந்து பெண் பயணி காயம்!!

Read Time:1 Minute, 20 Second

2fe70f56-9903-49a1-8c83-0fae230454ed_S_secvpfதிருவனந்தபுரம் பகுதியை சேர்ந்தவர் சுபா. நேற்று இவர் சென்னையில் இருந்து அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரெயில் மூலம் திருவனந்தபுரத்திற்கு புறப்பட்டார். இன்று காலை கோவில்பட்டி அருகே ரெயில் வரும் போது ஜன்னல் கதவின் ஷட்டர் சுபாவின் கையில் விழுந்தது. இதில் அவரது கையில் பலத்த காயம் ஏற்பட்டது. மேலும் ஓடும் ரெயிலில் அவருக்கு சிகிச்சை அளிக்க முடியாத நிலை ஏற்பட்டது.

இது குறித்து ரெயில்வே கார்டு உடனடியாக நெல்லை ரெயில் நிலைய மேலாளர் செல்லத்துரைக்கு தகவல் தெரிவித்தார். அவர் டாக்டர் குழு ஒன்றை ஏற்பாடு செய்தார்.

இந்நிலையில் நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்திற்கு ரெயில் வந்ததும் டாக்டர் குழுவினர் விரைந்து சென்று சுபாவிற்கு சிகிச்சை அளித்தனர். இதன் காரணமாக அனந்தபுரி எக்ஸ்பிரஸ் காலதாமதமாக திருவனந்தபுரத்திற்கு புறப்பட்டு சென்றது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சிறுமி துஷ்பிரயோகம் – முன்னாள் பிரதேசசபை உபதலைவர் கைது!!
Next post நெல்லை பேட்டையில் மூதாட்டியை கொன்று நகை கொள்ளை: மர்மநபர்கள் வெறிச்செயல்!!