திருமங்கலம் அருகே கூலித்தொழிலாளி கொலை: போலீசில் மனைவி சரண்!!

Read Time:1 Minute, 36 Second

44c73f5a-2733-4c58-8d9c-0dea82db5905_S_secvpfமதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள டி.கல்லுப்பட்டியை சேர்ந்தவர் சங்கிலி (வயது 40) கூலி தொழிலாளி. இவரது மனைவி பாண்டியம்மாள் (வயது 36). இவர்களுக்கு திருமணம் ஆகி 15 ஆண்டுகள் ஆகிறது.
இவர்களுக்கு 12–வயதில் மகன் உள்ளார். சங்கிலிக்கு குடிபழக்கம் உண்டு. இவர் தினமும் மது குடித்து விட்டு மனைவியிடம் தகராறு செய்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று இரவு சங்கிலி மது போதையில் வீட்டுக்கு வந்தார். அப்போது மனைவி பாண்டியம்மாளிடம் தகராறு செய்து அவரை அடித்து விரட்டியடித்தார். பின்னர் சங்கிலி வீட்டில் தூங்கினார். இன்று அதிகாலை 3 மணியளவில் வீட்டுக்கு பாண்டியம்மாள் வந்தார். கணவன் மீது ஆத்திரம் அடைந்த அவர் கொலை செய்ய திட்டமிட்டார். பின்னர் அவர் அங்கு கிடந்த குழவி கல்லை எடுத்து சங்கிலி தலையில் போட்டார். இதில் மண்டை உடைந்து அவர் ரத்த வெள்ளத்தில் அதே இடத்தில் இறந்தார்.

கணவர் இறந்ததை கண்டதும் பாண்டியம்மாள் டி.கல்லுப்பட்டி போலீசில் சரண் அடைந்தார். அவரை இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வாக்குப் பெட்டிகள் இன்று கொண்டு செல்லப்படும்!!
Next post திருவெண்ணைநல்லூர் அருகே மேலும் ஒரு பெண் கற்பழித்து கொலை: பொதுமக்கள் சாலை மறியல்!!