தஞ்சை அருகே லஞ்சம் வாங்கிய சப்–இன்ஸ்பெக்டர் கைது!!

Read Time:2 Minute, 31 Second

06b978bf-622c-41e6-932c-ef575b26a516_S_secvpfதஞ்சை மாவட்டம் பாப்பா நாடு அருகே உள்ள புலவன்காட்டை சேர்ந்தவர் தர்மலிங்கம் (வயது 45). இவர் தனது பெட்டி கடையில் மதுபானம் விற்பனை செய்வதாக கூறி அவரை ஊரை விட்டு விலக்கி வைத்து இருந்தனர்.

இந்த நிலையில் அவர் கடந்த 17.7.2015 அன்று புலவன்காட்டில் உள்ள முருகன் கோவிலுக்கு சென்று அர்ச்சனை செய்ய அர்ச்சகரிடம் தேங்காய் பழம் கொடுத்தார். அதனை கோவில் அர்ச்சகர் வாங்க மறுத்து விட்டார். இது தொடர்பாக அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. தர்மலிங்கம் கோவில் வந்தற்கு ஊர் மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இது குறித்து கோவில் அர்ச்சகர் விஸ்வநாதன் பாப்பாநாடு போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் சப்–இன்ஸ்பெக்டர் செல்வம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார். அப்போது புகார் மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்க அவர் ரூ.15 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. இதற்கு ஒப்புக்கொண்ட தர்மலிங்கம் நேற்று காலை ரூ 1000–ம் வழங்கினார். மீதி பணத்தை மாலையில் தருவதாக கூறி சென்றார். அவர் சப்–இன்ஸ்பெக்டர் செல்வம் லஞ்சம் கேட்பது தொடர்பாக லஞ்ச ஒழிப்பு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ரெத்தினவேலுவிடம் புகார் செய்தார். அவரது அறிவுரையின் பேரில் ரசாயன பவுடர் தடவிய ரூ. 7 ஆயிரத்தை போலீஸ் நிலையம் சென்று தர்மலிங்கத்திடம் வழங்கினார்.

அப்போது அதனை மறைந்து இருந்து கண்காணித்த லஞ்ச ஒழிப்பு இன்ஸ்பெக்டர்கள் சார்லஸ், நெப்போலியன், வெங்கடேசன் ஆகியோர் விரைந்து சென்று தர்மலிங்கத்தை கைது செய்தனர். பின்னர் அவர் கும்பகோணம் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டு தஞ்சை கிளை சிறையில் அடைக்கப்பட்டார். கைது செய்யப்பட்ட தர்மலிங்கம் ராஜகிகரியை சேர்ந்தவர் ஆவார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post செங்குன்றத்தில் 3-வது திருமணம் செய்ய முயன்ற ஓட்டல் ஊழியர் கைது!!
Next post சட்டவிரோத குடியேறிகள் அத்துமீறி நுழைவதை அரசு தடுத்து நிறுத்தும்!!