துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழப்பு!!

Read Time:1 Minute, 32 Second

1537650241Murderமட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடி ஹூதாப் பள்ளி புகையிரத வீதிக்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் இன்று சனிக்கிழமை நண்பகல் 12.15 மணியளவில் நடைபெற்றுள்ளது.

ஓட்டமாவடி பிறைந்துரைச்சேனை பகுதியைச் சேர்ந்த முகம்மட் அமீன் (37 வயது) என்பவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இனம் தெரியாத இளைஞர் ஒருவர் துப்பாக்கியினால் இவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு விட்டு தப்பிச் சென்றுள்ளார்.

துப்பாக்கிச் சூட்டில் அவர் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் வைத்தியசாலை அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

துப்பாக்கிதாரியை கைது செய்யும் பொருட்டு பொலிஸார் பொது மக்களின் உதவியையும் நாடியுள்ளனர்.

இச்சம்பவத்தின் பின்னணி தொடர்பாக வாழைச்சேனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 15 மாத மத்திய ஆட்சியில் ஒரு பைசா கூட ஊழல் இல்லை: பிரதமர் மோடி உரை!!
Next post இந்தியாவுடனான முதல் டெஸ்டை கைப்பற்றியது இலங்கை!!