மஹிந்தவிற்கு பிரதமர் பதவி இல்லை என்று மைத்திரி கூறவில்லையாம்!!

Read Time:1 Minute, 25 Second

6298322121682717088medagoda-Lமஹிந்த ராஜபக்ஷவிற்கு பிரதமர் பதவி வழங்க முடியாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது கடிதத்தில் குறிப்பிடவில்லை என மெதகொட அபயதிஸ்ஸ தேரர் தெரிவித்துள்ளார்.

கட்சியில் மேலும் சிரேஸ்ட தலைவர்கள் உள்ளதால் அவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்க ஒத்துழைப்பு வழங்குமாறு கோரிக்கை மாத்திரமே விடுத்துள்ளதாக பிக்குகள் குரல் சார்பில் இன்று (14) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் உரையாற்றிய அவர் தெரிவித்தார்.

ஜனாதிபதியின் கடிதம் மூலம் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு ஆதரவாளர்கள் உத்வேகம் அடைந்துள்ளதாக அவர் கூறினார்.

ஐமசுகூ 113 ஆசனங்களைப் பெற்று வெற்றிபெறும் என ஜனாதிபதி கூறியுள்ளதாக தேரர் தெரிவித்துள்ளார்.

நாட்டின் பிரதமர் யார் என்பதை மக்கள் தீர்மானிப்பர் என்றும் மக்கள் ஆணைக்கு தலைசாய்க்க வேண்டியது ஜனாதிபதியின் பொறுப்பு என்றும் மெதகொட அபயதிஸ்ஸ தேரர் குறிப்பிட்டுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தேர்தல் சட்டத்தை மீறுவோர் கழுத்துக்கு வாள் வரும்: 2343 இலக்கத்தை மறக்க வேண்டாம்!!
Next post அநுர, சுசில் பதவி நீக்கம்! ஐமசுமு பிளவு வெளிச்சத்திற்கு வந்தது!!