மஹிந்தவே பிரதமர் பதவிக்கு பொறுத்தமானவர் – ஶ்ரீசுக சிரேஸ்ட தலைவர்கள்!!

Read Time:1 Minute, 45 Second

523655642senaபிரதமர் பதவியை வகிக்கக் கூடிய தகுதி ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சிரேஸ்ட தலைவர் மஹிந்த ராஜபக்ஷவிற்கே இருப்பதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோன் செனவிரத்ன தெரிவித்தார்.

கொழும்பில் இன்று (14) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி சார்பில் பிரதமர் பதவியை வகிக்கக் கூடிய தகுதியுள்ள சிரேஸ்ட தலைவர்கள் இருப்பதாகவும் அவர்கள் நிமல் சிறிபால டி சில்வா, ஜோன் செனவிரத்ன, ஷமல் ராஜபக்‌ஷ, அதாவுட செனவிரத்ன, ஏ.எச்.எம். பொளசி, சுசில் பிரேமஜயந்த மற்றும் அநுர பிரியதர்ஷன யாப்பா ஆகியோர் என்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு அனுப்பிய கடிதத்தில் கூறியிருந்தார்.

இந்நிலையில் ஜனாதிபதி பெயர் கூறிய குறித்த ஏழு பேர் சார்பிலும் கருத்து வெளியிடுவதாகக் கூறி இன்று ஊடக சந்திப்பு நடத்திய ஜோன் செனவிரத்ன, பிரதமர் பதவியை ஏற்கத் தயாரில்லை என்று குறிப்பிட்டார்.

இந்த ஊடக சந்திப்பில் ஜனாதிபதி பெயர் குறிப்பிட்ட ஏழு பேரும் பங்கெடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தேர்தல் பிரச்சாரங்களுக்கு இன்று நள்ளிரவுடன் ஓய்வு!!
Next post தேர்தல் சட்டத்தை மீறுவோர் கழுத்துக்கு வாள் வரும்: 2343 இலக்கத்தை மறக்க வேண்டாம்!!