உள்நாட்டு உற்பத்தித்துறை பலப்படுத்தப்படும் – ஜனாதிபதி!!

Read Time:2 Minute, 11 Second

2056227102index22018ம் ஆண்டின் பின்னர் வௌிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் எஸ்பஸ்டஸ் தகடுகள் இறக்குமதி செய்யப்படுவதை முழுமையாக நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

அமைச்சரவையுடன் கலந்தாலோசித்து இதுதொடர்பான தீர்மானம் ஒன்றை மேற்கொள்வதாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.

நாட்டு மக்களின் உடல் ஆரோக்கியத்தை கருத்திற் கொண்டே இந்த தீர்மானத்தை மேற்கொள்வதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

கொழும்பில் இடம் பெற்ற பீங்கான், ஓடுகள் மற்றும் கண்ணாடி தயாரிப்பு தொழிலாளர்களின் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

மக்களின் ஆரோக்கியத்திற்கு பாரிய சவாலாக இருக்கக் கூடிய எஸ்பஸ்டஸ் தகடுகள் இறக்குமதி செய்யப்படுவதை நிறுத்துவதற்கு தான் சுகாதார அமைச்சராக இருந்த காலத்தில் பல முயற்சிகள் மேற்கொண்ட போதிலும் அது பலனளிக்கவில்லை என்று தெரிவித்தார்.

எவ்வாறாயினும் எமது நாட்டில் உற்பத்தி செய்ய முடியுமான பொருட்களை வௌிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்து அந்த மக்களை சந்தோஷப்படுத்துவதற்கு தற்போதைய அரசாங்கம் தயாரில்லை என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

தௌிவான தேசிய கொள்கை ஒன்றின் மூலம் நாட்டின் உள்நாட்டு உற்பத்தியை பலப்படுத்துவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இந்தியா சென்ற இலங்கையர் ஆலய குளத்தில் இருந்து சடலமாக மீட்பு!!
Next post ரிசாத்தின் அரசியல் வாழ்வு முடியப் போகிறது! ஹக்கீம்!!