மஹிந்த மக்களால் நிராகரிக்கப்பட்டுள்ளார் – பிரதமராவது வெறும் கனவு மட்டுமே!!

Read Time:1 Minute, 36 Second

2093422443ranil-Lமஹிந்த ராஜபக்ஷ மக்களால் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் பிரதமராவது வெறும் கனவு என்றும் பிரதமர் ரணிர் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசிய முன்னணியின் வாக்குகள் தொடர்ந்து அதிகரித்த வண்ணமே இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

எதிர்வரும் தேர்தலை முன்னிட்டு நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணியினால் இன்று கொழும்பில் இடம்பெற்ற இறுதி ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இந்தமுறை நடைபெறுவது நீதியான தேர்தல் என்பதுடன் ஊடகங்களும் சுதந்திரமாக செயல்படுவதை அவதானிக்க முடிந்ததாக ரணில் விக்கரமசிங்க தெரிவித்தார்.

எதிர்வரும் 60 மதங்களில் தமது அரசாங்கம் புதிய தேசம் ஒன்றைக் கட்டியெழுப்புவதுடன் அதன்போது எழுதுவதற்கும் பேசுவதற்கும் சுதந்திரமுள்ள ஜனநாயகத்தை ஏற்படுத்துவதாக தெரிவித்தார்.

ஒரு குடும்பத்திற்கு மாத்திரம் அதிகாரத்தை வழங்குவதற்குப் பதிலாக அனைவருக்கும் அதிகாரம் உள்ள நாட்டை கட்டியெழுப்புவதாக பிரதமர் தெரிவித்தார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஊழல் மோசடிகாரர்களை தேசிய பட்டியலில் மூலம் பாராளுமன்றம் அனுப்ப வேண்டாம்!!
Next post இந்தியா சென்ற இலங்கையர் ஆலய குளத்தில் இருந்து சடலமாக மீட்பு!!