ஜப்பானில் கலக்கும் காதல் ஓட்டல்கள்

Read Time:2 Minute, 1 Second

anikiss2.gifஜப்பானில் காதலர்கள், தம்பதிகளுக்கென லவ் ஓட்டல்கள் அதிகரித்து வருகின்றன. ஜப்பானில் இதுவரை 5 காதல் ஓட்டல்கள் உள்ளன. அந்த ஓட்டல்களின் முகப்பு ரோஜா மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, உள்ளே நுழைந்ததும் ரொமான்ஸ் ஆசையைத் தூண்டி விடும். உள்ளே அறைகளில் சென்ட் மணம் கமிழ, கண்ணைக் கவரும் காதல் சிற்பங்களும் மயக்கும். அடுத்து, மெத்தைகளோ விருந்தாளிகளின் விருப்பத்துக்கேற்ற வேகம் தேர்வு செய்யும் வகையில் அதிரும்படி (வைப்ரேஷன்) வடிவமைக்கப்பட்டு உள்ளன. காதலர்கள், தம்பதிகளின் ஆசைக்கேற்ப மெத்தையின் அதிர்வு, வெப்ப நிலை, குஷனின் நெகிழ்வு ஆகியவற்றை வைத்துக் கொள்ளலாம். அந்த 5 ஓட்டல்களில் இதுபோல மொத்தம் 195 அறைகள் உள்ளன. இந்த எண்ணிக்கையை அடுத்த 2 ஆண்டுகளில் 2,000 ஆக அதிகரிக்க ஓட்டல் நிறுவனங்கள் திட்டமிட்டு உள்ளன. இதற்காக அதிக முதலீடு திரட்ட பங்கு வெளியிட உள்ளன. அவற்றின் பங்குகளில் முதலீடு செய்வோருக்கு 8 சதவீத ஆண்டு டிவிடெண்ட் உத்தரவாதம் அளிக்கப்பட்டு உள்ளது. அடுத்த 5 ஆண்டுகளில் காதலர் தங்கும் அறைகள் எண்ணிக்கை 3,500 வரை உயர உள்ளது. நடுத்தர வருவாய் பிரிவினருக்கும் கட்டுப்படியாகும் வகையில் ஒரு வழியை லவ் ஓட்டல் நிர்வாகம் வைத்துள்ளது. அதாவது, இந்த அறைகளில் தங்க, நாள் வாடகையாக மட்டும் இல்லாமல், மணிக்கணக்கிலும் தேர்வு செய்யலாம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post பிரகாஷ் ராஜின் புது ‘சாதனை’
Next post வீட்டுப்பணி, டிரைவர் வேலைக்கு சவுதி அரேபியாவில் புது நிபந்தனை