வெற்றி பெற்றாலும் உங்களுக்கு பிரதமர் பதவி இல்லை – மைத்திரி, மஹிந்தவுக்கு அறிவிப்பு!!

Read Time:6 Minute, 56 Second

1529875136Pressசிலவேளை ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு வெற்றி பெற்றாலும் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு அனுப்பி வைத்துள்ள 5 பக்க கடிதத்தில் இதனைத் தெரிவித்துள்ளார்.

அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கியமான பகுதிகள் இதோ…

“நீங்கள் என்னுடன் ஒத்துழைத்து செயற்பட எதிர்பார்ப்பதாக கூறும் செய்தியொன்றை அண்மையில் ஊடகங்கள் வௌியிட்டிருந்தன. உங்களுக்கு அவ்வாறான எதிர்பார்ப்பு இருக்குமாயின் அது தொடர்பில் உங்கள் கவனத்திற்கு கொண்டு வரவேண்டிய சில விடயங்கள் உள்ளன. உங்களால் தான்தோன்றித் தனமாக நிறைவேற்றிக் கொள்ளப்பட்ட 18வது திருத்தச் சட்டத்தின் காரணமாக முழு நாட்டு மக்களின் ஜனநாயக சுதந்திரம் மற்றும் உரிமைகள் மறுக்கப்பட்டன.

அதுமாத்திரமன்றி ஶ்ரீலலங்கா சுதந்திர கட்சியின் உயிர்நாடியான சமுக ஜனநாயகவாத கொள்கை அழிக்கப்பட்தோடு கட்சியின் சிரஷே்ட உறுப்பினர்கள் உள்ளிட்ட ஆதரவாளர்கள் பலருக்கு அநீதி இழைக்கப்பட்டது. நிரந்தரமாக ஜனாதிபதி பதவியில் இருக்கவென நீங்கள் மக்களின் சுதந்திரம் மற்றும் அபிமானம், கட்சி மற்றும் கட்சிக்காக அர்ப்பணித்த ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சிரேஷ்ட உறு்பினர்களின் அரசியல் எதிர்காலத்தை பறித்த விதம் ஒழுக்கமற்றது.

உங்களுக்கு முன் இருந்த ஜனாதிபதிகள் போன்று இரண்டு முறை பதவிக்காலம் நிறைவடைந்து ஓய்வு பெற்றிருந்தால் நமது கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் இடையே ஒருவர் ஜனாதிபதியாகவும் மற்றுமொருவர் பிரதமராகவும வருவதற்கு வாய்ப்பு இருந்தது.

இதன்மூலம் தெரிய வருவது நீங்கள் இந்த தேர்தலின் பின்னரும் அவர்களுக்குறிய சந்தர்ப்பத்தை இல்லாதுசெய்ய முயற்சிப்பதாகும். அவர்களுக்கு கிடைக்க வேண்டிய உரிய இடம் கிடைக்க வேண்டும் அல்லவா?. எதிர்வரும் தேர்தலில் ஆட்சியமைப்பதற்குத் தேவையான 113 ஆசனங்களை ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு பெற்றுக்கொண்டால் பிரதமராகும் சந்தரப்பங்கள் நழுவிப் போன ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சிரேஷ்ட தலைவர் ஒருவர் நியமிக்கப்பட வேண்டும் என நான் நம்புகின்றேன்.

ஒருவேளை ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புக்கு 113 என்ற ஆசன எல்லையை நெருங்க முடியாமல் சற்று அருகில் நெருங்கி ஆட்சியமைப்பதற்கு தேவையான மேலதிக ஆசனங்களை பெற்றுக் கொள்ளவென நிறைவேற்று ஜனாதிபதி என்ற முறையில் தன்னால் தலையிட முடியும். அப்போதும் கூட பிரதமராக வேண்டியது நீங்கள் அல்லாது கட்சியின் வேறு சிரேஷ்ட தலைவர் ஒருவராகும். எமது கட்சியின் உண்மையான பலம், பிரதமர் பதவி வகிக்கும் அளவுக்கு அரசியல் ஞானம் மற்றும் தூர நோக்கு தகுதி உடைய பல தலைவர்கள் உள்ளமையாகும்.

நிமல் சிறிபால டி சில்வா, ஜோன் செனவிரத்ன, ஷமல் ராஜபக்‌ஷ, அதாவுட செனவிரத்ன, ஏ.எச்.எம். பொளசி, சுசில் பிரேமஜயந்த மற்றும் அநுர பிரியதர்ஷன யாப்பா போன்ற சிரேஷ்ட தலைவர்களில் ஒருவரை இந்த தேர்தலின் பின்னர் பிரதமராக நியமிக்க உங்களது ஒத்துழைப்பு ஆசீர்வாதம் என்பவற்றை மக்கள் முன் காட்டுமாறு நாடு, மக்கள், ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பெயரால் நான் உங்களிடம் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றேன்.

கடந்த ஜனவரி 8ம் திகதி தோல்வியடைந்தது தொடக்கம் இன்றுவரை நீங்கள் நாடு முழுக்க விகாரை விகாரையாக செல்லும் விதம், செல்லும் தடவைகள், அதற்கு ஊடக அனுசரனை பெற செயற்பட்ட விதம் உண்மையில் ஏற்றுக்கொள்ள முடியாது. 2010 ஜனவரி 26ம் திகதி தொடக்கம் 2014 நவம்பர் 21ம் திகதிவரை செயற்பட்ட முறை எனக்கு நன்கு தெரியும்.

கடந்த 06 மாத காலமாக தொடர்ச்சியாக விகாரைகளுக்கு சென்றதன் மூலமாவது உங்களுக்குள் தர்ம சிந்ததனை, கடவுள் பக்தி வளர்ந்துள்ளதா என்பது எனக்கு சந்தேகம். அது எனக்குத் தெரியாது. நீங்கள் தனிப்பட்ட ரீதியில் எமது கட்சி உறுப்பினர்களுடன் மேற்கொள்ளும் பேச்சுவார்ததையில் நீங்கள் வைத்த கோபம், வைராக்கியம், துவேஷம் மற்றும் மமதை அடங்கிய கருத்துக்கள் எனக்குத் தெரிய வந்துள்ளது.

இந்த நிலையில் நாடு மற்றும் கட்சியின் நலனிற்காக எதிர்வரும் பொதுத்தேர்தல் வரை மனசாட்சிக்கு விரேதமில்லாமல் புத்தியுடன் செயற்படுமாறும், இனவாதத்தை தூண்டும் வகையில் கருத்துக்களை வௌியிட வேண்டாம் என்றும், கட்சிக்குள் பிளவுகளை அதிகரிக்க இடமளிக்க வேண்டாமென்றும் கேட்டுக் கொள்வதோடு ஐக்கிய் மக்கள் சுதந்திர கூட்டமைப்புக்கு வெற்றி கொள்ள வாய்ப்புக்களை ஏற்படுத்தும் வகையில் செயற்படுமாறு உங்களிடம் கேட்டுக் கொள்கின்றேன்.

இப்படிக்கு. தலைவர். ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நடிகைகளின் படங்கள் பல!!
Next post வடக்கில் 70வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மாதாந்தம் 2000 ரூபா கொடுப்பனவு!!