வஸீம் தாஜுதீன் யோஷித ராஜபக்‌ஷவுக்கு அண்ணனைப் போலவாம்!!

Read Time:2 Minute, 23 Second

1754666735Udayaவிடுதலைப் புலிகளுக்கு பணம் வழங்கியது தொடர்பில் தன்னுடன் விவாதத்திற்கு வருமாறு அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்கவிற்கு சவால் விடுவதாக மேல்மாகாண சபை உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

விடுதலைப்புலிகளுக்கு கடந்த 2006ம் ஆண்டு 800 மில்லியன் ரூபா வழங்கப்பட்டது தொடர்பில் முன்னாள் ஜனாதிபதியை முடிந்தால் விவாதிக்க வருமாறு அமைச்சர் சம்பிக ரணவக்க தெரிவித்திருந்தார்.

அது தொடர்பாக பதிலளித்த கம்மன்பில, ரணில் விக்ரமசிங்கவின் ஊழியருடன் விவாதிக்க மஹிந்த ராஜபக்ஷ வரமாட்டார் எனத் தெரிவித்தார்.

முடிந்தால் தன்னுடன் விவாதத்திற்கு வருமாறு சம்பிக்க ரணவக்கவிற்கு சவால் விடுவதாக உதய கம்மன்பில தெரிவித்தார்.

இந்த ஊடக சந்திப்பின் போது வஸீம் தாஜுதீன் தொடர்பிலும் உதய கம்பன்பில கருத்து தெரிவித்தார்.

வஸீம் தாஜுதீன் தொடர்பில் யோஷித ராஜபக்‌ஷவிடம் விளக்கம் கேட்டதாகவும், அதற்கு வஸீம் தாஜூதீனை தனது அண்ணனைப் போல மதிப்பதாக யோஷித ராஜபக்‌ஷ தன்னிடம் தெரிவித்ததாகவும் உதய கம்மன்பில தெரிவித்தார்.

அத்துடன் தாஜுதீனை அடிக்கடி சந்தித்ததில்லை என்றும் அவர் படித்த பாடசாலையிலேயே தானும் படித்ததாகவும் இவை தவிர வேறு எந்த தொடர்பும் அவருடன் தனக்கில்லை என்றும் யோஷித ராஜபக்ஷ தன்னிடம் தெரிவித்ததாக உதய கம்மன்பில தெரிவித்தார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மேஜர் ஜெனரல் பிரசன்ன சில்வா பதவி நீக்கம்!!
Next post சஜின் வாஸ் மீண்டும் 25ம் திகதிவரை விளக்கமறியலில்!!