கற்பழிக்கப்பட்ட பெண்ணின் பத்தினித்தன்மையை நிரூபிக்க 40 கிலோ கல்லை தூக்கும்படி தீர்ப்பளித்த கிராம பஞ்சாயத்து!!

Read Time:1 Minute, 35 Second

e2fe1d26-86fd-40be-9abd-441cf02ddf19_S_secvpfகுஜராத் மாநிலத்தில், திருமணமான பெண் அவரது ஊரைச் சேர்ந்த நபரால் கற்பழிக்கப்பட்டார். இதனால் கர்ப்பம் அடைந்த அந்த பெண் மீண்டும் தனது கணவனுடன் சேர்ந்து வாழ விரும்பினார். கணவருடன் வாழ 40 கிலோ எடையுள்ள கல்லை தலையில் சுமக்க வேண்டும் என அந்த ஊரின் பஞ்சாயத்து தீர்ப்பளித்துள்ளது.

இந்தப் பெண் தனது கர்ப்பத்தை கலைக்க முயற்சித்தபோது குஜராத் உயர் நீதிமன்றம், அதற்கு அனுமதி வழங்கவில்லை. அந்தப் பெண்ணை குழந்தையைப் பெற்று நீதிமன்றத்தில் ஒப்படைக்கும்படி உத்தரவிட்டுள்ளது.

ஏற்கனவே, இந்தப் பெண்ணை கற்பழித்தவன் சிறையில் அடைக்கப்பட்டபோது, வெளியில் வந்ததும் முதல் வேலையாய் அவளைக் கொல்லப் போவதாக அவன் கொலை மிரட்டல் விடுத்துள்ளான்.

இதுபோல கல்லைச் சுமக்க வைப்பதை ‘அக்னிபரீட்சை’ என அப்பகுதியில் அழைக்கின்றனர். இந்தப் பரீட்சையின் மூலம் அந்தப் பெண் தான் ‘பரிசுத்தமானவள்’ என நிரூபிக்க முடியும். ஒருவேளை, இந்தக் கல்லை சுமக்காமல், தன்னை நிரூபிக்க முடியவில்லை என்றால், அவளது கணவருடன் மீண்டும் வாழ முடியாது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பலவந்தப்படுத்தி பெண்ணை முத்தமிடுவது குற்றமில்லை: வழக்கு பதிவு செய்ய டெல்லி போலீசார் மறுப்பு!!
Next post லக்னோ அருகே போலீஸ் நிலைய கழிப்பறைக்குள் தூக்கில் தொங்கிய வீடற்ற பெண்!!