பலவந்தப்படுத்தி பெண்ணை முத்தமிடுவது குற்றமில்லை: வழக்கு பதிவு செய்ய டெல்லி போலீசார் மறுப்பு!!

Read Time:2 Minute, 0 Second

636641fd-15a8-46b9-abe9-bb133f178f5d_S_secvpfடெல்லியின் கன்னாட்பிளேஸ் பகுதியில் பட்டப்பகலில் பலவந்தப்படுத்தி பெண்ணை முத்தமிட முயற்சித்த நபரின்மீது வழக்கு பதிவுசெய்ய மறுத்த வேதனையை பாதிக்கப்பட்ட பெண்ணின் தோழி அவரது முகநூல் பக்கத்தில் பதிவிட்டார். இதுகுறித்து ஒரு ஆங்கிலப் பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது.

நிகில் என்கிற அந்த நபர், டெல்லியின் பிரபல பகுதியில் ஒரு பெண்ணை முத்தமிட முயன்றபோது, அக்கம்பக்கத்தில் சென்றவர்களின் உதவியுடன், அவரைப் பிடித்து வைத்துக்கொண்டு, போலீசாருக்கு தகவல் கொடுத்தார் அந்தப் பெண். தகவல் கொடுத்த 40 நிமிடம் கழித்து அங்கே வந்துசேர்ந்த போலீசார், அவரைக் கைது செய்யாமல், அவரிடம் தனியாக பேசியிருக்கின்றனர். அதன் பின்னர் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் புகார் கடிதம் எழுதித் தரும்படி கேட்டிருக்கின்றனர்.

எனினும், அப்பகுதி சப்-இன்ஸ்பெக்டர் சஜீவ் குமார் அந்தப் பெண்ணின் புகாரை தெளிவாக இல்லை எனக் கூறி இரு முறை நிராகரித்துள்ளார். அத்துடன், பாதிக்கப்பட்ட பெண்ணின் தொலைபேசி எண்ணை, நிகிலின் பெற்றோரிடம் கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்ட பெண்ணின் தோழி, ராதிகா பி சிங் என்ற பெண் முகநூலில் நிகிலின் புகைப்படத்துடன் வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post காத்தான்குடி நகரசபை முன்னாள் தவிசாளருக்கு பிணை!!
Next post கற்பழிக்கப்பட்ட பெண்ணின் பத்தினித்தன்மையை நிரூபிக்க 40 கிலோ கல்லை தூக்கும்படி தீர்ப்பளித்த கிராம பஞ்சாயத்து!!