உடுமலையில் 1½ வயது ஆண் குழந்தையை அடித்துக் கொன்ற தந்தை!!

Read Time:3 Minute, 1 Second

27c7aeba-0ba1-418f-abcb-0825aa601384_S_secvpfதிருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை சேர்ந்தவர் நடராஜன் (வயது 25). இவரது மனைவி மலர்க்கொடி (20).

காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர்களுக்கு 1½ வயதில் ராஜன் என்ற மகன் உள்ளான். இவர்கள் திருப்பூர் மாவட்டம் உடுமலையில் உள்ள ஒரு கோழிப்பண்ணையில் தங்கி வேலை செய்து வந்தனர்.

கடந்த 10 நாட்களுக்கு முன்பு மனைவி, குழந்தையுடன் சொந்த ஊருக்கு சென்ற நடராஜன் 3 நாட்களுக்கு முன்பு வேலைக்கு திரும்பினார்.

நடராஜனுக்கு குடிப்பழக்கம் உண்டு. ஊருக்கு சென்று வந்ததில் இருந்து நடராஜன் எப்போதும் குடித்து விட்டு வீட்டுக்கு வந்து மனைவியுடன் தகராறு செய்து அவரை அடித்து உதைத்தார்.

நேற்று இரவும் நடராஜன் குடிபோதையில் வீட்டுக்கு வந்தார். இதுதொடர்பாக கணவன், மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த நடராஜன் மனைவியை சரமாரியாக அடித்து உதைத்து தாக்கினார். அப்போது குழந்தை ராஜன் கதறி அழுதான்.

இது நடராஜனுக்கு மேலும் ஆத்திரத்தை ஏற்படுத்தவே, பெற்ற குழந்தை என்றும் பாராமல் ராஜனை அடித்து உதைத்து தூக்கி வீசி எறிந்தார். இதில் ராஜன் கதறித்துடித்தபடி மயங்கி விழுந்தான். பின்னர் நடராஜன் அங்கிருந்து சென்று விட்டார்.

கணவன் தாக்கியதில் தலையில் படுகாயமடைந்த நிலையில் இருந்த மலர்க்கொடி, மயக்க நிலையில் இருந்த குழந்தையை தூக்கிக் கொண்டு உடுமலை பஸ் நிலையத்துக்கு வந்தார். அங்கு அவரால் நிற்க முடியாமல் சாய்ந்து விழுந்தார்.

இதைப் பார்த்த அப்பகுதி மக்கள் ஆம்புலன்சு மூலம் மலர்க்கொடியையும், குழந்தையையும் மீட்டு உடுமலை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள் இறந்து விட்டதாக கூறினர். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த மலர்க்கொடி கதறி அழுதார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் உடுமலை டவுன் டி.எஸ்.பி. கனகேஸ்வரி, இன்ஸ்பெக்டர் அன்பரசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து தலைமறைவான நடராஜனை தேடி வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மதுரை மத்திய சிறையில் கைதிகளுக்கு நாப்கின் தயாரிக்கும் பயிற்சி!!
Next post ரூ.2½ லட்சத்துக்கு பெண் குழந்தை விற்பனை: கைதான தந்தை– 5 பேர் ஜெயிலில் அடைப்பு!!