மதுரை மத்திய சிறையில் கைதிகளுக்கு நாப்கின் தயாரிக்கும் பயிற்சி!!

Read Time:1 Minute, 59 Second

3845c150-8351-442b-a9e4-e14d333f672c_S_secvpfமதுரை மத்திய சிறையில் சுமார் 2 ஆயிரம் கைதிகள் உள்ளனர். இவர்கள் வருமானத்துக்கு சிறைக்குள்ளேயே சிறு தொழில்களும் தொடங்கப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு மதுரை சிறையில் மீன் வளர்ப்பு, காளான், காய்கறிகள் விற்பனை கூடம், துணி சலவையகம் ஆகிய பிரிவுகளும் தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.

இந்த நிலையில் தற்போது தமிழகத்திலேயே முதல் முறையாக இச்சிறையில் பெண்களுக்கான நாப்கின் தயாரிக்கும் பிரிவு நவீன கருவிகளுடன் தொடங்கப்பட்டுள்ளது.

இந்த நவீன கருவிகளை கையாண்டு நாப்கின் தயாரிப்பதற்காக 100 கைதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு உள்ளது. அதன்படி தற்போது 30 கைதிகள் நாப்கின் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இங்கு மாதம் 3 லட்சம் நாப்கின் தயாரிக்கவும் இதை தமிழ்நாடு மருத்துவ கழகத்துடன் இணைந்து விற்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் இந்த தயாரிப்பில் ஈடுபடும் கைதிகளுக்கு தினசரி கூலியாக ரூ.100–ம், விற்பனை லாபத்தில் 25 சதவீதமும் வழங்கப்படும் என சிறை கண்காணிப்பாளர் அறிவுடைநம்பி கூறினார்.

சிறைக்குள் பல தொழில்கள் தொடங்கி கைதிகளுக்கு வேலை கொடுக்கப்படுவதால் தற்போது கைதிகளுக்குள் ஏற்படும் மோதல்கள் குறைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post விழுப்புரம் அருகே விஷம் குடித்து தற்கொலை முயற்சி: சாவுக்கு பயந்து ஆஸ்பத்திரிக்கு ஓடிய வாலிபர்!!
Next post உடுமலையில் 1½ வயது ஆண் குழந்தையை அடித்துக் கொன்ற தந்தை!!