ஆசிரியை குளிப்பதை எட்டிப்பார்த்தபோது குளியல் அறை துவாரத்தில் தலை சிக்கி தவித்த எம்.பி. கார் டிரைவர்!!

Read Time:2 Minute, 16 Second

ff82b82b-ee0f-4f6d-b2cf-3495438d5e26_S_secvpfகேரள மாநிலம் வயநாடு பாராளுமன்ற உறுப்பினராக இருப்பவர் ஷானவாஸ். இவரது கார் டிரைவர் நவ்சாத் (வயது 32). இவர் மலப்புரம் மாவட்டம் ஐகரப்படியை சேர்ந்தவர். இவரது வீட்டருகே இளம் ஆசிரியை வசித்து வருகிறார்.

ஆசிரியை குளிப்பதற்காக குளியல் அறைக்கு சென்றார். இதனை நோட்டமிட்ட நவ்சாத் ஆசிரியை குளிப்பதை பார்க்க ஆசைப்பட்டார். அதன்படி குளியல் அறைக்கு மேல் இருந்த துவாரத்தில் தலையை விட்டார். ஆசிரியை குளித்து முடிந்து கிளம்பிச்சென்று விட்டார். அதன்பின்னர் துவாரத்தில் இருந்து தலையை எடுக்க நவ்சாத் முயன்றார்.

ஆனால் துவாரத்தில் தலை சிக்கியது. பலமுறை முயன்றும் பலன் அளிக்காததால் நவ்சாத் அச்சம் அடைந்தார்.

மூச்சு திணறி இறந்து விடுவோம் என்று பயந்த அவர் சத்தம்போட்டு அலறினார். குளியல் அறைக்குள் சத்தம்போட்டதால் உடனடியாக யாருக்கும் கேட்கவில்லை.

நீண்ட நேர போராட்டத்துக்கு பின்னர் அக்கம் பக்கத்தினருக்கு தெரியவந்தது. பொதுமக்கள் குளியல் அறைக்கு சென்று நவ்சாத்தை மீட்க முயன்றனர். ஆனால் அவர்களாலும் முடியவில்லை. தலைசிக்கிய இடத்தை இடித்து பெரியதாக்கி நவ்சாத்தை மீட்டனர்.

மீட்கப்பட்டவரிடம் இது குறித்து கேட்டபோது ஆசிரியை குளிப்பதை பார்க்கவே குளியல் அறை துவாரத்தில் தலையை விட்டேன். உயிர்போகும் அளவுக்கு நிலைமை நடக்கும் என்று எதிர்பார்க்கவில்லை என்றார்.

இது குறித்து பொதுமக்கள் போலீசில் புகார் செய்தனர். வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஜார்க்கண்டில் சூனியம் வைத்ததாக கூறி ஒரே நாளில் 5 பெண்கள் படுகொலை: மகளிர் ஆணையம் கண்டனம்!!
Next post விழுப்புரம் அருகே விஷம் குடித்து தற்கொலை முயற்சி: சாவுக்கு பயந்து ஆஸ்பத்திரிக்கு ஓடிய வாலிபர்!!