மும்பையை கலக்கும் பெண் கடவுள் – கையில் சூலாயுதத்துடன் பக்தர்களுக்கு ஆசி!!

Read Time:4 Minute, 9 Second

c1a0f309-66ff-40cb-9311-c78e9e1ca533_S_secvpfமராட்டிய மாநிலத்தில் ஒரு சிற்றூரில் பிறந்த பெண் ஒருவர் மும்பையில் வசித்து வருகிறார். தற்போது இவருக்கு 46 வயதாகிறது. சினிமா படங்களில் வரும் கவர்ச்சி நடிகை போல் மிடுக்காக காணப்படுகிறார்.
எப்போதும் லிப்ஸ்டிக், சிவப்பு நிற அலங்கார உடையில் கையில் ரோஜாப்பூவுடன் இருப்பார். 10–ம் வகுப்பு வரை மட்டுமே படித்த இவருக்கு 18 வயதில் திருமணம் ஆனது. கணவர் பெயர் மோகன்சிங்.

கணவரை பிரிந்து வேலை தேடி தனியாக மும்பை வந்தார். அப்போது ராம்தீன் தாஸ் என்ற சாமியாரை சந்தித்தார். அதன்பிறகு இவர் தன்னைத்தானே ‘ராதே மா’ (ராதா அம்மா) என பெயர் சூட்டிக் கொண்டு பெண் சாமியாராக வலம் வரத்தொடங்கினார்.

இவர் தன்முன் சிவன், பார்வதி, காளி ஆகியோர் தோன்றியதாகவும், அதன் பின்புதான் பெண் கடவுளாக மாறியதாகவும் அந்தப் பகுதி மக்களிடையே தெரிவித்தார்.

இதையடுத்து அவரை பார்க்கவும், அவரிடம் ஆசி பெறவும் மக்கள் கூட்டம் கூடியது. நடிகைபோல் தன்னை அலங்கரித்துக் கொண்டு தன்னை சந்திக்க வருபவர்களுக்கு கையில் சூலாயுதத்துடன் ஆசி வழங்கினார். அவர்களுக்கு ரோஜாப்பூ வழங்குவார். சிலரை கட்டிப்பிடித்தும் ஆசி வழங்குவார்.

பெண் கடவுள் ராதே மா முதலில் வெளியில் தெரியாமல் இருந்தார். பல நடிகர்– நடிகைகளும் சென்று இவரை சந்தித்து ஆசி பெற்றனர். அதன்பிறகு பிரபலமானார்.

தற்போது ராதேமா மீது மும்பை போலீசில் பெண் ஒருவர் வரதட்சணை புகார் கொடுத்துள்ளார். மேலும் ராதே மா கடவுள் பெயரைச் சொல்லி அருவறுக்கத்தக்க வகையில் நடந்து கொள்வதாகவும், அவரது நடவடிக்கைகள் ஆபாசமாக இருப்பதாகவும் கூறி வக்கீல் ஒருவரும் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்த நிலையில் பெண் சாமியார் ராதே மாவுக்கு மும்பை போலீசார் விசாரணைக்கு ஆஜராக உத்தரவிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ராதா மா மீது எந்த வழக்கும் இல்லை. அவர் யாரையும் ஏமாற்றவும் இல்லை என்று நடிகையும் ராதேமாவின் தீவிர பக்தையுமான ராக்கிசவுந்த் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், ‘‘நான் அடிக்கடி ராதே மாவை சந்திப்பேன். அவர் எனக்கு நல்ல ஆலோசனைகள் வழங்குவார். கவலையுடன் சென்றால் அவரை சந்தித்த பின்பு கவலைகள் பறந்து போகும்’’ என்றார்.

இதற்கிடையே ராதே மா மும்பையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தலையில் தொப்பியும், கால்கள் தெரியும் அளவுக்கு அரைகுறை உடையும் அணிந்து ஆபாசமாக இருக்கும் காட்சிகள் இணைய தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால் மும்பையில் ராதே மா பற்றிய பேச்சாக இருந்து வருகிறது.

இதற்கிடையே ராதே மாவுக்கு மும்பையில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. போலீசாரும் அவரது நடவடிக்கைகளை கண்காணிக்க தொடங்கி உள்ளனர். எனவே அவர் துபாய்க்கு தப்பிச் செல்ல திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஈவ் டீசிங் செய்தவர்களிடம் இருந்து தப்ப ஓடும் பஸ்சில் இருந்து குதித்த மாணவிகள்: ஒருவர் காயம்!!
Next post ஜார்க்கண்டில் சூனியம் வைத்ததாக கூறி ஒரே நாளில் 5 பெண்கள் படுகொலை: மகளிர் ஆணையம் கண்டனம்!!