ஈவ் டீசிங் செய்தவர்களிடம் இருந்து தப்ப ஓடும் பஸ்சில் இருந்து குதித்த மாணவிகள்: ஒருவர் காயம்!!

Read Time:2 Minute, 7 Second

9d627d0e-a629-4843-8c21-77403237fea2_S_secvpfஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள ஜாம்ஷெட்பூர் நகரில் ஈவ் டீசிங் செய்தவர்களிடம் இருந்து தப்புவதற்காக ஓடும் பஸ்சில் இருந்து குதித்த 3 பள்ளி மாணவிகளில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

ஜாம்ஷெட்பூர் நகரில் உள்ள சாக்‌ஷி பகுதியில் உள்ள பள்ளியில் படித்துவரும் 3 மாணவிகள் மற்றும் அதே பள்ளியில் படித்த சில மாணவர்கள் நேற்று மாலை வீடு செல்வதற்காக அவ்வழியே வந்த பஸ்சில் ஏறியுள்ளனர்.

அதே பஸ்சில் இருந்த சில மாணவர்கள் அந்த மாணவிகளிடம் ஈவ் டீசிங்கில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து, இது குறித்து பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டரிடம் மாணவிகள் புகார் தெரிவித்ததுடன் பஸ்சை உடனடியாக நிறுத்தும்படி கேட்டுள்ளனர். ஆனால், ஈவ் டீசிங் செய்த மாணவர்களின் நண்பர் என்று கூறப்படும் டிரைவர், பஸ்சை நிறுத்தாமல் ஓட்டிக் கொண்டே சென்றுள்ளார்.

இதனைத்தொடர்ந்து, ஈவ் டீசிங் பேர்வழிகளிடம் இருந்து தப்பிக்கும் நோக்கத்தில் ஓடும் பஸ்சில் இருந்து மூன்று மாணவிகளும் கீழே குதித்தனர். இதில் ஒருவர் காயமடைந்துள்ளார். காயமடைந்து சாலையில் விழுந்துகிடந்த மாணவியை மீட்ட உள்ளூர் மக்கள் எம்.ஜி.எம். மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் இரு மாணவர்கள் மற்றும் அவர்களின் நண்பர் என்று கூறப்படும் சம்பவம் நடைபெற்ற பஸ்சின் டிரைவர் ஆகியோரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post காஷ்மீரில் பள்ளத்தாக்கில் விழுந்த ராணுவ அதிகாரி சாவு!!
Next post மும்பையை கலக்கும் பெண் கடவுள் – கையில் சூலாயுதத்துடன் பக்தர்களுக்கு ஆசி!!