கருணாவால் மக்கள் ஆதரவு குறையுமே தவிர கூடாது!!

Read Time:1 Minute, 30 Second

543375860Untitled-1முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு ஆதரவு வழங்குவதாக அறிவித்திருப்பதன் ஊடாக, கூட்டமைப்பிற்கு மக்கள் ஆதரவு குறையுமே தவிர அதிகரிக்காது என, பி.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான பி.அரியநேத்திரன் மேலும் கூறியதாவது,

முரளிதரன் மக்கள் செல்வாக்கு இல்லாதவர். தமிழ் மக்கள் அவரை கண்டு கொள்ளவில்லை. அதேபோல் எந்தக் கட்சியும் இவரை சேர்த்துக் கொள்ளவுமில்லை.

அதனால் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு ஆதரவு வழங்குவதாக அறிவித்துள்ளார்.

இவரின் ஆதரவின்றி பல தேர்தல்களில் தமிழ் தேசிய கூட்டமைப்பு பாரிய வெற்றி பெற்றுள்ளது. அதே போல் இம்முறையும் வெல்வோம். இப்போதாவது கூட்டமைப்பை ஏற்றுக்கொண்டுள்ளதை நாங்கள் வரவேற்கின்றோம்.

அவரது தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கான ஆதரவு என்பது காலம் கடந்த ஞானோதயமாகும் என்றார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவராக மீண்டும் பாதெனிய!!
Next post நடிகைகளின் படங்கள் பல!!