இலங்கையில் அரசியல் கைதிகள் எவரும் கிடையாதாம்!!

Read Time:1 Minute, 41 Second

694568119150225195836_wijedasa_rajapaksha_512x288_bbc_nocreditஇலங்கையில் அரசியல் கைதிகள் என்று எவரும் கிடையாது என்று நீதி அமைச்சரும் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளருமான விஜேதாஸ ராஜபக்ஷ பிபிசி தமிழோசையிடம் தெரிவித்துள்ளார்.

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவே இறுதியாக தடுத்து வைக்கப்பட்டிருந்த அரசியல் கைதி எனவும், அவர் தற்போது விடுதலை செய்யப்பட்டுள்ளமையினால் அரசியல் கைதி எவரும் சிறைகளில் இல்லை எனவும் அவர் திட்டவட்டமாக குறிப்பிட்டுள்ளார்.

போர் காலத்தில் கைது செய்யப்பட்டவர்கள் கூட வெடிகுண்டு வைத்தல், கொலை செய்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களில் கைது செய்யப்பட்டவர்கள் என தெரிவித்துள்ள அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ, அவர்களை அரசியல் கைதிகள் என கருத முடியாது என்று கூறியுள்ளார்.

ஆனால், விடுதலைப் புலிகள் என்ற சந்தேகத்தில் தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்களை அரசியல் கைதிகளாகத்தான் கருத வேண்டும் என, சில நாட்களுக்கு முன்னதாக முன்னாள் இராணுவ தளபதியும், ஜனநாயகக் கட்சியின் தலைவருமான சரத் பொன்சேகா பிபிசியிடம் கூறியிருந்தார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வேகமாக வாகனத்தை செலுத்தும் சாரதிகள் இனிமேல் கவனம்!!
Next post புதுக்கடை தாக்குதல் பைரூஸ் ஹாஜியாரின் கீழ்தரமான அரசியல் நடவடிக்கை – முஜிபுர்!!