நாட்டை மீட்ட பாதுகாப்பு தரப்பினர் அதிருப்தியில்!!

Read Time:2 Minute, 18 Second

845077395Nalaka-theroஇந்த முறைப் பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியில் ரணில் விக்ரமசிங்கவிற்கு வழங்கப்படும் வாக்குகள் நாட்டை பிளவுபடுத்துவதற்கு வழங்கும் உறுதி என்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் மஹிந்த ராஜபக்‌ஷவிற்கு அளிக்கும் வாக்குகள் நாட்டை பாதுகாப்பதற்கு அளிக்கும் வாக்குகள் என்றும் தேசிய அமைப்புக்களின் ஒன்றியம் சார்பாக பெங்கமுவே நாலக தேரர் குறிப்பிட்டார்.

நாட்டை மீட்டுத் தந்த உயர் மட்ட இராணுவ அதிகாரிகளை இன்று சிஐடி யினர் பின் தொடர்கின்றனர். இவை பாதுகாப்பு செயலாளரின் அனுமதியுடனேயே இடம்பெறுகின்றது.

இதன் காரணமாக பாதுகாப்பு பிரிவின் உயர் அதிகாரிகள் அதிருப்தி அடைந்திருக்கின்றார்கள் என்று அவர் தெரிவித்தார்.

நாடு படுகுழியில் விழுவதை தடுக்க வேண்டுமானால் மஹிந்த ராஜபக்‌ஷ மீண்டும் இந்த நாட்டின் அதிகாரத்திற்கு வரவேண்டும் என்றும் பெங்கமுவே நாலக தேரர் குறிப்பிட்டார்.

இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

இதேவேளை மஹிந்த ராஜபக்‌ஷ மீண்டும் அதிகாரத்திற்கு வந்தால் நாடு சர்வதேச மட்டத்தில் தனிமைப்படுத்தப்படும் என்பது பொய்யான பிரச்சாரமாகும் என்று இந்த ஊடக சந்திப்பில் கலந்து கொண்டிருந்த கலாநிதி குணதாச அமரசேகர தெரிவித்தார்.

ஶ்ரீமாவோ பண்டாரநாயக்கவிற்கு அடுத்ததாக சிறந்த வெளிநாட்டுக் கொள்கைகளை மேற்கொண்டு வந்தவர் ராஜபக்‌ஷ என்றும் கலாநிதி குணதாச அமரசேகர தெரிவித்தார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தாஜுதீனின் மரணத்துடன் ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவு அதிகாரிகள் 03 பேர் தொடர்பு!!
Next post தேசிய மற்றும் மாகாண ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு!!