யாழில் தேர்தல் விதிமுறைகளை மீறிய அறுவருக்கு பிணை!!

Read Time:1 Minute, 8 Second

2075962593Untitled-1யாழ்ப்பாணம் – மிருசுவில் பிரதேசத்தில் தேர்தல் விதிமுறைகளை மீறிய அறுவருக்கு சாவகச்சேரி நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.

மிருசுவில் பிரதேசத்தில் நேற்றிரவு 09.00 மணியளவில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சுவரொட்டிகளை தம்வசம் வைத்திருந்த 6 பேரை கொடிகாமம் பொலிஸார் கைதுசெய்திருந்தனர்.

அவர்களிடமிருந்து 285 சுவரேட்டிகள், ஒட்டுப் பசை மற்றும் முச்சக்கரவண்டி ஆகியவற்றைக் கைப்பற்றியுள்ளதாகப் பொலிஸார் குறிப்பிட்டனர்.

இதனையடுத்து இன்று சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றில் இவர்கள் ஆஜர்படுத்தப்பட்டனர்.

இதன்போது குறித்த சந்தேகநபர்களை தலா 10 ஆயிரம் ரூபா பெறுமதியான சரீரப் பிணையில் செல்ல பதில் நீதவான் செ.கணபதிப்பிளை அனுமதித்தார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பாரத கொலை வழக்கில் குற்றங்களை ஏற்றுக்கொள்ள துமிந்த உள்ளிட்ட 12 சந்தேகநபர்கள் மறுப்பு!!!
Next post கந்தளாய் பிரதேசத்தில் போலியான வாக்குச் சீட்டுக்களுடன் ஒருவர் கைது!!